நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. இந்த பழக்கமானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும். நகம் கடிப்பதால், பல்வேறு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடக்கூடும்.
நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள்:-
நகம் கடிப்பவர்களின் விரல்களைப் பார்த்தால் ஒருவித அசிங்கமாகவும் இருக்கும். மேலும் விரல்களில் காயங்கள் இருக்கும். இதனால் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.
நகங்களை கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் முழுங்குகிறார்கள். இப்படி முழுங்குவதால், செரிமான அமிலத்தால் அவை செரிமானமாகால், வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களை வலிமையிழக்கச் செய்துவிடும்.