ஆரோக்கியமான வாழ்வு என்பது ஒரு வரம், இந்த வரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட அதை பராமரிக்க பல வழிகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதிலும் வயது அதிகமாக ஆக, வயது மூப்பின் எதிரொலி ஆரோக்கியத்தில் எதிரொலிக்கும். அதிலும் எலும்பின் ஆரோக்கியம் மற்றும் எலும்பின் அடர்த்தி தொடர்பான கவலைகள் வயதாகும்போது அதிகரிக்கும். இளம் வயதில், உடல் மிக வேகமாக புதிய எலும்பை உருவாக்குகிறது. பழைய எலும்புகள் உடைவது, இளம் வயதில் உடலின் இயக்கத்தை பாதிக்காது, ஆனால், வயதான காலத்தில் எலும்பின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும். இந்த இயற்கையான செயல்முறையை முற்றிலும் நிறுத்த முடியாது என்றாலும், அதை மெதுவாக்கலாம், உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
என்றென்றும் இளமையாய் இருக்க உணவு முக்கியமானது. உணவில் இருந்து கிடைக்கும் சத்துக்களே, ஆரோக்கியத்திற்கான அடிப்படைகளில் ஒன்று என்பதால், உணவையும், நாம் உட்கொள்ளும் சத்துக்களையும் சரிசமமாக பரமரிப்பது நல்லது. உங்கள் வயதாகும் தன்மையை குறைத்திடும் சில உணவுகள் இவை:
மேலும் படிக்க | ரசாயனம் சேர்க்கப்படாத ஆர்கானிக் கருப்பட்டி
திராட்சைப்பழச் சாறு
சிட்ரஸ் பழங்கள் எப்போதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது எலும்பு அடர்த்தி இழப்பைத் தடுக்கும். பழங்கள் மிகவும் சுவாரஸ்யமான பண்புகளைக் கொண்டுள்ளன.
உடலில் pH அளவை சமப்படுத்த உதவுகிறது மற்றும் கால்சியம் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. கால்சியத்திற்கு ப்ரூன் சாறு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
அனைவருக்கும் என்றும் என்றென்றும் நல்லது கீரை மற்றும் பிற பச்சை காய்கறிகள். உடல் மற்றும் எலும்புகளில் வலி ஏற்படும்- வைட்டமின் டி குறைபாடு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
காய்கறிகள். கால்சியத்தின் நல்ல மூலமான கீரைகளையும் காய்கறிகளையும், சமைத்தோ அல்லது ஜூஸாகவோ உட்கொள்ளலாம்.
பசும்பாலைப் போன்ற ஊட்டச்சத்து மிகுந்த பானம் வேறு எதுவுமே இல்லை என்று சவாலே விடலாம். அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள பசும்பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. எலும்பு அடர்த்திக்கு இது அவசியம்.
பால் பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்கள், சோயா, ஓட்ஸ், அரிசி, தேங்காய், முந்திரி மற்றும் பாதாம் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளை கட்டாயம் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ