கேரட்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் 6 அதிசயங்கள்..!

ஆரோக்கியமான காய்கறிகளுள் ஒன்றாக கருதப்படும் கேரட்டில் பல விதமான சத்துகள் அடங்கியுள்ளன. அவை என்னென்ன என்பதையும் அவற்றால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் தெரிந்து கொள்வோம்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 13, 2023, 12:17 PM IST
  • கேரட் ஹெல்தியான காய்கறிகளுள் ஒன்று.
  • இதில் சர்க்கரையின் அளவு குறைவாகவே இருக்கும்.
  • உடல் எடை குறைப்பிற்கும் இது வழிவகுக்கும்.
கேரட்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் 6 அதிசயங்கள்..! title=

கேரட், ஹெல்தியான காய்கறி வகைகளுள் ஒன்று. குறைவான சர்க்கரை அளவுடன் அதிக அளவில் புரதச்சத்துகளை அடக்கியுள இந்த காய்கறிக்குள் பல மேஜிக் சக்திகள் அடங்கியுள்ளதாக மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர். கேரட்டில் வைட்டமின் சத்துகளும், ஃபைபர், கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்துகளும் அடங்கியுள்ளன. உடலில் உள்ள இரும்பு சத்துகளை அதிகரிக்கவும் கேரட் உதவுகிறது. 

கேரட்டை எப்படியெல்லாம் சாப்பிடலாம்? 

கேரட்டை கழுவிவிட்டு, தோல் நீக்கி விட்டு அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். நம் ஊரில் பண்டிகை காலங்களில் கேரட்டை துருவி அல்வா செய்வார்கள். வீட்டில் சீக்கிரமாக ஒரு பொரியலை செய்து முடிக்க கேரட்டை நறுக்கியோ அல்லது துருவியோ பதார்த்தம் செய்து கொடுப்பார்கள். கேரட்டுடன் பீன்ஸையும் சேர்த்து பொரியல் செய்யலாம். கேரட்டை துருவி அதை இட்லி அல்லது தோசை மீது மழை சாரல் போல பொழிந்து சாப்பிடலாம். 

மேலும் படிக்க | தினசரி ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஏன் சாப்பிட வேண்டும்? 5 காரணங்கள்

கேரட்டினால் ஏற்படும் நன்மைகள்:

1.கண்பார்வை அதிகரிக்கும்:

கேரட் சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்கும் என்று சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது இருதய நோய் வராமல் தடுக்கவும் உதவுவதாக சில ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரட்டின் மருத்துவ நலன்கள் குறித்து கூறும் மருத்துவர்கள், இது நம் உடலில் இரும்பு சக்தியினை அதிகரிக்க உதவுவதாகவும் இதை நாம் பனிகாலத்தின் போது இருக்கும் டயட்டில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கின்றனர். 

சாலட், ஸ்நாக்ஸ் மற்றும் தினசரி சாப்பாட்டுடன் சேர்த்து கேரட்டை எடுத்துக்கொள்ளலாம் என சில உடற்பயிற்சி நிபுணர்களும் கூறுகின்ற்னர். இது, உடல் எடை இழப்பிற்கு உதவுமாம். 

கேரட்டில் பீட்டா கெரோட்டீன் என்ற சத்து உள்ளது. இது, வைட்டமின் ஏ-வில் முக்கியமான சத்துகளுள் ஒன்றாகும். இது, நம் கண் பார்வைக்கு சக்தி கொடுக்கும் நரம்பு மண்டலங்களுக்கு உதவுமாம். அதனால்தான் கேரட் கண்களுக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். 

2.உடல் எடை குறைப்பு:

கேரட்டில் கலோரிகள் குறைவாக உள்ளன. மேலும் இதில் அதிக நார்ச்சத்து  நிறைந்த உணவுகளுள் ஒன்று கேரட். கேரட் சாப்பிடுவதால் பசித்தன்மையை கட்டுப்படுத்த முடியும், இது மேலும் மேலும் உணவு உட்கொள்வதில் இருந்து நம்மை தடுக்கிறது. எனவே, மற்ற குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளுடன் ஒப்பிடும்போது கேரட்டை சாப்பிடும் போது நீங்கள் வேகமாக பசியில் இருந்து விடுபடுவீர்கள். இரவு நேர பசி வேதனைக்கும் இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது.

3.குடலிற்கு நல்லது: 

கேரட்டில் உள்ள அதிக நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் சிறந்த குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கேரட்டில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது, இது நன்மை பயக்கும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். இதனால் மலச்சிக்கல் போன்ற நிலை ஏற்படாமல் தடுக்கலாம். 

4. நோய் எதிர்ப்பு சக்தி:

அதிக வைட்டமின் ஏ, ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை நம் உடலில் உறுதி செய்கிறது. கேரட்டில் குறிப்பிட்ட அளவு வைட்டமின் சி உள்ளது - அவை, நோய்-தடுப்பு பண்புகளுக்கு அறியப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல் கட்டுப்பாட்டை உறுதி செய்வது மட்டுமல்லாமல், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதனால், எந்த விதமான நோய்களும் உடலில் அவ்வளவு எளிதாக அண்டாது. 

5.சர்க்கரை அளவு: 

கேரட்டுகள், உடலில் உள்ள க்ளைமிக் இண்டக்ஸ் எனும் மண்டலத்தை ஒரே அளவில் வைத்திருக்க உதவும். ஒரு கிராம் கேரட்டில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலில் உள்ள இரத்த சர்க்கரை சமமாக வைத்திருக்க உதவும். எனவே, கேரட்டை சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

6. சரும பொலிவுக்கு உதவும்: 

கேரட்டை உட்கொள்வதால் முகம் பொலிவு பெற்று சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில், வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்திருப்பதால் சருமம் இளமையுடன் இருக்க உதவுகிறது. 

மேலும் படிக்க | இத்துணுண்டு ஏலக்காயில் இவ்வளவு விஷயம் இருக்கா... ஆராய்ச்சி சொல்லும் ஆச்சர்ய தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News