Health Benefits of Fig: அத்திப்பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த அத்திப்பழம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் நன்மை பயக்கும். அத்திப்பழத்தை பழமாகவோ அல்லது உலர்ந்த பழமாகவோ, இரண்டு வகையிலும் உட்கொள்ளலாம். உலர்ந்த அத்திப்பழங்களும் இனிப்பாக இருக்கும். இவற்றை நீண்ட நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். அவை உண்ணக்கூடிய சிறிய, முறுமுறுப்பான விதைகளைக் கொண்டிருக்கின்றன. அத்திப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அத்திப்பழத்தை உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்:
செரிமானம்: அத்திப்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. அத்திப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அத்திப்பழத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்தால் அது மென்மையாக மாறும். இதனால் நார்ச்சத்து எளிதில் ஜீரணமாகும். இது மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது.
எடை இழப்பு: அத்திப்பழம் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. இது உடலுக்கு நீண்ட நேரம் முழுமையான உணர்வை அளிப்பதுடன் பசியை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
இரத்த அழுத்தம்: அத்திப்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. அத்திப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க | கோடை காலத்தில் வைட்டமின் சி பழங்களை சாப்பிட வேண்டும் ஏன்?
இதய ஆரோக்கியம்: அத்திப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அத்திப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
நீரிழிவு நோய்: அத்திப்பழம் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. ஆகையால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
எலும்பு ஆரோக்கியம்: அத்திப்பழம் எலும்புகளை பலப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
ஆற்றல்: ஆற்றல் அளவை அதிகரிக்க அத்திப்பழம் உதவும். அத்திப்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது.
மலச்சிக்கல்: அத்திப்பழம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது: அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அத்திப்பழம் உட்கொள்ளலாம். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது.
சரும பாதுகாப்பு: அத்திப்பழம் உட்கொள்வது சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு நல்லதாக கருதப்படுகின்றது. அத்திப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளன. அவை சருமத்திற்கும் கூந்தலுக்கும் தேவையான போஷாக்கை அளிக்கின்றன.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ