சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கை மூலங்களிலிருந்து பெறக்கூடிய வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.  

Written by - RK Spark | Last Updated : Oct 22, 2022, 05:25 AM IST
  • உடல் எடை குறைப்பில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • வாழைப்பழம் உடல் செயல்பாட்டிற்கு போதுமான ஆற்றலை தருகிறது.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்டுகள் உள்ளது.
சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? title=

* உடல் எடை குறைப்பில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது, இதில் கலோரிகள் குறைவாக உள்ளது.  வாழைப்பழத்தில் அதிகளவு நார்சத்து இருப்பதால் இதனை உண்டதும் உங்களுக்கு நிறைவான உணர்வு ஏற்படும்.  அதிலும் பழுக்காத வாழைப்பழங்களில் நோயெதிர்ப்பு தன்மை அதிகமுள்ளது.

* வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு, போலேட், நியாசின், ரிபோஃபிளேவின் மற்றும் பி6 போன்ற வைட்டமின்களும், தாதுக்களும், அதிகளவு ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது.  இவை உடல் செயல்பாட்டிற்கு போதுமான ஆற்றலை தருகிறது. 

மேலும் படிக்க | உடல் எடை குறைக்க முட்டையை இப்படி சாப்பிடுங்க: பட்டுனு குறையும் எடை 

* பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்டுகள் உள்ளது, அதில் குறிப்பாக வாழைப்பழத்தில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்டுகள் நிரம்பியுள்ளது.  இதனை சாப்பிடுவதால் இதய சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் பல்வேறு விதமான நோய்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

* உயர் ரத்த அழுத்த பிரச்னையை குறைப்பதில் வாழைப்பழம் முக்கிய பங்கினை வகிப்பதாக கூறப்படுகிறது, வாழைப்பழத்தில் குறிஅவன உப்புக்களும், அதிகளவு பொட்டாசிய சத்தும் நிறைந்துள்ளது.

*பொட்டாசிய சத்து தான் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான மூலமாகும், அந்த சத்து வாழைப்பழத்தில் அதிகமாக இருப்பதால் , இதனை சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராது.

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

 

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News