புதுடெல்லி: நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவாக இருந்தால் தான், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், வயது அதிகரிக்கும் போது எலும்புகள் பலவீனமடையும். அனைவருக்கும் வைட்டமின் டி தேவை. ஆனால், ஆரோக்கியமாக இருக்க போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கவில்லை என்றால் அதை ஹைபோவைட்டமினோசிஸ் டி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நமது உடல், கால்சியத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி இன்றியமையாதது ஆகும், எலும்பின் முக்கிய கட்டுமானத் தொகுதிகளில் ஒன்றான கால்சியத்தை உடல் பெறுவதற்கு மட்டுமல்ல, நரம்பு, தசை மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளிலும் வைட்டமின் டி பங்கு வகிக்கிறது.
வைட்டமின் D, நமக்கு மூன்று வழிகளில் கிடைக்கிறது. நமது உடலின் சருமத்தின் மூலமும், உண்ணும் உணவில் இருந்தும், சப்ளிமெண்ட்ஸ் மூலமும் இந்த சத்து கிடைக்கிறது. சூரிய ஒளி நம் மீது பட்டடல், நமது உடல் இயற்கையாகவே வைட்டமின் D ஐ உருவாக்குகிறது. ஆனால் அதிக சூரிய ஒளியானது, சருமத்தை பாதிக்கும், வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் என்பத்ஹோடு தோல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும், எனவே பலர் தங்கள் வைட்டமின் டி பிற மூலங்களிலிருந்து பெற முயற்சி செய்கிறார்கள்.
வைட்டமின் டி குறைபாடு எதனால் ஏற்படுகிறது?
பல்வேறு காரணங்களால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படலாம்
மேலும் படிக்க | அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?
உணவில் வைட்டமின் டி
உணவில் இருந்து போதுமான வைட்டமின் டியை உடல் உறிஞ்சாதபோது பிரச்சனை ஏற்படும்.
சூரிய ஒளியில் போதுமான அளவு செல்லாததால் வைட்டமின் டி குறைவு ஏற்படும்.
கல்லீரல் அல்லது சிறுநீரகங்கள், வைட்டமின் D ஐ உடலில் செயலில் உள்ள வடிவமாக மாற்ற முடியாத நிலை
வைட்டமின் டியை மாற்றும் அல்லது உறிஞ்சும் உங்கள் உடலின் திறனில் தலையிடும் மருந்துகளின் பயன்பாடு
மேற்கூறிய இந்த காரணங்களால் வைட்டமின் டி குறைபாடுகள் ஏற்படும்.
மேலும் படிக்க | அளவுக்கு மிஞ்சினால் வைட்டமின் பி கேன்சரை உருவாக்கும்
வைட்டமின் டி குறைபாட்டால் யாருக்கு ஆபத்து?
தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கும், கைக்குழந்தைகளுக்கும் வைட்டமின் டி குறைபாடு அதிக சிக்கலை ஏற்படுத்தும்.
சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் குறைவாக இருக்கும் சருமம் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படும். கொழுப்பை சரியாகக் கையாளாத கிரோன் நோய் அல்லது செலியாக் நோய் போன்ற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைவு பாதிப்பு ஏற்படும். ஏனெனில் வைட்டமின் டி உறிஞ்சப்படுவதற்கு கொழுப்பு தேவைப்படுகிறது.
உடல் பருமன் உள்ளவர்களின் உடல் கொழுப்பு, வைட்டமின் D உடன் பிணைக்கப்பட்டு இரத்தத்தில் சேருவதைத் தடுக்கிறது.
மேலும் படிக்க | ஒல்லியாக இருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..! இந்த 5 பிரச்சனைகள் பாதிக்கும்
மேலும், இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள், சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய் உள்ளவர்கள், உடலின் கால்சியம் அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் அதிகமாக சுரக்கும் ஹைபர்பாரைராய்டிசம் உள்ளவர்கள், சார்கோயிடோசிஸ், காசநோய், ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் அல்லது பிற கிரானுலோமாட்டஸ் நோய் உள்ளவர்கள் என பலருக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்.
உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் அபாயம் இருந்தால், மருத்துவரை அணுகுங்கள். உங்கள் உடலில் வைட்டமின் டி எவ்வளவு உள்ளது என்பதை அறிய இரத்தப் பரிசோதனை உள்ளது, அதை செய்து வைட்டமின் டி அளவை தெரிந்து, அதை சீர் செய்யலாம்.
மேலும் படிக்க | Kidney Stone Alert: சிறுநீரகக்கல்லால் அவதியா? 5 பழங்களை சாப்பிடவேக்கூடாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ