இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இப்போது கோடை வெப்பம் மிக அதிகமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். கோடைக்காலத்தில், சாப்பிடுவதிலும் குடிப்பத்திலும் செய்யும் ஒரு சிறிய தவறினால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை கூட சில சமயங்களில் ஏற்படலாம். அதிலும், குழந்தைகளை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஏனென்றால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் பலவீனமாக இருக்கும். கோடையில் குழந்தைகளின் உணவில் சேர்க்கக்கூடாத அந்த 4 விஷயங்கள் என்னவென்று இன்று தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை அதிகம் கலந்த பானங்கள் மற்றும் சோடா
குழந்தைகள் கோடையில் ஜில்லென்று குடிக்க சர்க்கரை கலந்த பானங்களை குடிக்க ஆசைப்படலாம், ஆனால் இவை நீரிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும் வகையில் வெறும் கலோரிகளை கொண்டது. அதற்குப் பதிலாக உங்கள் பிள்ளைக்கு தண்ணீர், பால் அல்லது இனிப்பு அதிகம் கலக்காத குளிர்ந்த பானங்களை குடிக்க ஊக்குவிக்கவும்.
பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள்
சிப்ஸ், குக்கீகள் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதோடு, நோ எதிப்பு சக்தியும் குறையும். அதற்கு பதிலாக, உங்கள் குழந்தைகளுக்கு புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானிய சிற்றுண்டிகளை (பாப்கார்ன் போன்றவை) வழங்குங்கள்.
முட்டை
முட்டை உடலை சூடாக வைத்திருக்கும். எனவே கோடையில் உங்கள் குழந்தைகளின் உணவில் இருந்து முட்டை உணவுகளை நீக்குவது. இருப்பினும், உங்கள் குழந்தைகளுக்கு முட்டைகளை கொடுக்க விரும்பினால், அவற்றை சிறிய அளவில் கொடுங்கள். ஏனெனில் கோடையில் அதிக முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மேலும் படிக்க | மருந்தே தேவையில்லை... யூரிக் அமில பிரச்சனைக்கு சில எளிய தீர்வுகள்!
ஐஸ்கிரீம் மற்றும் உறைந்த நிலையில் உள்ள உணவுகள்
ஐஸ்கிரீம் மற்றும் பிற உறைந்த நிலையில் உள்ள உணவுகள் வெப்பமான கோடை நாட்களில் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் கலோரிகளில் அதிகமாக இருக்கும். பழங்கள், தயிர் மற்றும் இயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தி வீட்டில் ஐஸ்கிரீம் தயாரிக்க முயற்சிக்கவும்.
கோடையில் குழந்தைகளுக்கு என்ன உணவளிக்க வேண்டும்?
கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது, நீரேற்றமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும் ப்ரெஷ்ஷான புதிய உணவில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த பருவத்தில் அதிக வெப்பநிலை மற்றும் அதிகரித்த உடல் செயல்பாடு குழந்தைகளை சோர்வாகவும், உணரலாம். நீர் சத்து வெகுவாக குறையலாம். எனவே அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது அவசியம், அவை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் கத்திரிக்காய் வேண்டாமே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ