கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள, தங்கள் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்வது, மாஸ்கை பயன்படுத்துவது, சமூக இடவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள, அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களின் ஒன்று சானிடைசர். அதனால், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துகிறார்கள்.
ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சானிடைசர் பயன்படுத்துவதிலும் கவனம் வேண்டும். கொரோனா வைரஸிலிருந்து (Corona VIrus) தப்பிக்க அதிகமாகப் பயன்படுத்துவதால் பல தோல் பிரச்சினைகள் ஏற்படலாம். சருமத்தில் சானிட்டீசரின் தாக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்
சானிடைசரில் உள்ள உட்பொருட்கள் என்ன ?
சானிடடைசரில் ஏராளமான எத்தில் ஆல்கஹால், ஐசோபிரைல் ஆல்கஹால் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான இரசாயனங்கள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர். இது நமது சருமத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்லும். சானிடைசர் பல வகையான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
ALSO READ | #PIBFactCheck: 12+ குழந்தைகளுக்கு கோவேக்ஸின் அனுமதி? அரசு கூறுவது என்ன
சருமத்தின் மீது ஏற்படும் பாதிப்புகள் என்ன?
சானிடைசரை அடிக்கடி பயன்படுத்துவதால் நமது தோல் வறண்டு, சிவந்து போகும். இது தவிர, சருமத்தின் மீது அரிப்பு ஏற்படலாம். சானிடைசரில் எலுமிச்சை மற்றும் வினிகர் உள்ளன. அதனால், அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், உங்கள் சருமத்தையும் எரிச்சல் ஏற்படக் கூடும். உங்கள் சருமம் மிகவும் உணர்திறன் கொண்டதாக இருந்தால், நீங்கள் சானிடடைசரின் பயன்பாட்டை நிச்சயம் குறைக்க வேண்டும்.
இதற்கான தீர்வுகள் என்ன?
சானிடைசரைப் பயன்படுத்துவதால், உங்களுக்கு தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால், சானிட்டீசருக்கு பதிலாக சோப்பு கலந்த நீரை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். சோப்பு நீரால், 20 விநாடிகள் கைகளை கழுவுவது, உங்களை கொரோனாவிலிருந்து நிச்சயம் பாதுகாக்கும். அது சானிடைசரை விட அதிக திறன் பெற்றது என்பது பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. உங்களுக்கு சரும பிரச்சினைகள் இருந்தால், விரைவில் சருமத்திற்கான மருத்துவரை உடனே அணுகவும்.
ALSO READ | கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்: போப் பிரான்ஸிஸ்