புதுடெல்லி: தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (All India Institute of Medical Sciences) மூத்த தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) கோவிட்-19 என பொதுவாக அறியப்படும் SARS-CoV-2 இறுதிக் கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
எண்டெமிக் என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்தில் மட்டுமே தொற்று பாதிப்பு இருக்கும் நிலை மற்றும் அந்த குறிப்பிட்ட பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்த எண்ணிக்கையில் இருக்கும்.
"COVID-19 தடுப்பூசி நிலை மற்றும் இயற்கையான தொற்றுநோயைப் பார்க்கும்போது, மிக விரைவில், நம்மில் பெரும்பாலோர் தொற்றுநோயைப் பெறுவார்கள் என்று கூறலாம். பின்னர் இந்த வைரஸ் உள்ளூர் வைரஸாக மாறும்," டாக்டர் சஞ்சய் ராய் ANI இடம் கூறினார்.
ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபர்களை கண்காணித்து கிடைத்த அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், கோவிட் நோயிலிருந்து மீண்டவர்களே சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக இவர் கூறுகிறார்.
"COVID-19 என்பது RNA வைரஸ், இந்த வைரஸ் ஆயிரக்கணக்கான முறை மாற்றமடைந்துள்ளது. இருப்பினும், கவலைகளை கொடுக்கும் மாறுபாடு ஆல்பா, பீட்டா, காமா டெல்டா மற்றும் தற்போது, மிக வேகமாக பரவும் நோயான Omicron போன்ற ஐந்து மட்டுமே உள்ளது. எனவே தற்போது இது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவுகிறது" என்று அவர் கூறுகிறார்.
"ஒட்டுமொத்த தீவிரத்தன்மை குறைவாக இருப்பதால், நம்மில் பெரும்பாலோர் இந்த நோய்த்தொற்றைப் பெறுவோம். தற்போதைய அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், கோவிட் நோயிலிருந்து மீண்டவர்கள் தற்போது சிறந்த பாதுகாக்கப்பட்டவர்கள் என்றால், தடுப்பூசி போட்டவர்கள் தான் அதற்கு அடுத்த அளவு அதிக பாதுகாப்பு பெற்றவர்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
கிராமப்புறங்களிலும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும் வைரஸின் முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும், மக்கள் தொகை அடர்த்தி காரணமாக நாட்டிலும், முக்கியமாக டெல்லி மற்றும் மும்பை போன்ற மெட்ரோ நகரங்களிலும் Omicron துரிதகதியில் பரவுகிறது என்றும் டாக்டர் ராய் கூறினார்.
கோவிட்-19 இன் ஓமிக்ரான் மாறுபாடு இந்தியாவில் சமூகப் பரவல் நிலையில் உள்ளது மற்றும் புதிய வழக்குகள் அதிவேகமாக அதிகரித்து வரும் பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று INSACOG தனது சமீபத்திய புல்லட்டின் தெரிவித்துள்ளது.
ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR