பெரும்பாலான மக்களுக்கு காலையில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. எனவே, தேயிலை இலைகளுக்கு அதிகரித்து வரும் தேவை காரணமாக, அதில் கலப்படம் செய்து விற்கும் வணிகமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கலப்படம் செய்யப்பட்ட தேயிலை இலைகள் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வீடியோவில் கலப்படம் செய்யப்படும் உணவு பொருட்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இம்முறை கலப்பட தேயிலை இலைகளை (கலப்பட்ட டீ இலைகள்) அடையாளம் முறையை விளக்கியுள்ளது
கலப்படம் செய்யப்படும் முறை
தேயிலை இலைகளில் பல வழிகளில் கலப்படம் செய்யப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் பழைய அல்லது பயன்படுத்திய தேயிலை இலைகளை மீண்டும் காயவைத்து பொட்டலம் செய்து சந்தையில் விற்பனை செய்கின்றனர். அந்த தேயிலை இலையில் நிறம் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது, இது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த கலப்பட தேயிலை காரணமாக கல்லீரலின் கோளாறுகள் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கும் என சுகாதார நிபுணர்களின் கூறுகின்றனர்.
ALSO READ | Men's Health: ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ‘இவை’ அத்தியாவசியம்
கலப்படத்தை கண்டறியும் முறை
அக்டோபர் 21 அன்று ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு புதிய வீடியோவில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தேயிலை இலைகளில் கலப்படத்தைக் கண்டறிய மிகவும் எளிமையான முறையை விவரித்துள்ளது.
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறுவது என்ன
கலப்படம் செய்பவர்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்திய டீ சக்கைகளை, உண்மையான தேயிலை இலைகளுடன் கலந்து விற்கிறார்கள். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), தேயிலை இலைகளின் தரத்தை கண்டறியும் ஒரு எளிய சோதனையை விவரித்துள்ள வீடியோவை இங்கே காணலாம்:
Detecting Exhausted Tea Leaves Adulteration in Tea Leaves#DetectingFoodAdulterants_11#AzadiKaAmritMahotsav@jagograhakjago @mygovindia @MIB_India @PIB_India @MoHFW_INDIA pic.twitter.com/BqCcT9X8SO
— FSSAI (@fssaiindia) October 21, 2021
1. முதலில் ஒரு பில்டர் பேப்பரை (வடிகட்டி காகிதம்) எடுத்து அதன் மீது தேயிலை இலைகளை வைக்கவும்.
2. இப்போது அதன் மீது சில துளிகள் தண்ணீரை தெளித்து ஈரப்படுத்தவும்.
3. இப்போது இந்த பில்டர் காகிதத்தை குழாய் நீரில் கழுவவும்.
4. இப்போது இந்த வடிகட்டி தாளின் நிறம் மாறியுள்ளதா என்பதை வெளிச்சத்தில் வைத்து பார்க்கவும்.
5. வடிகட்டி காகிதத்தில் கறை இல்லை என்றால் அது உண்மையான தேயிலை இலைகள். வடிகட்டி தாளில் கருப்பு-பழுப்பு என கருமையான புள்ளிகள் தோன்றினால், இந்த தேயிலை இலை கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR