Gym Fitness பெற வேண்டுமா... டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் நிறைந்த உணவுகள் அவசியம்

Gym Fitness: டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோன் அதிகரிக்காமல்  கட்டுடலை உடலை உருவாக்குவது மிகவும் கடினம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2022, 02:33 PM IST
  • தசைகளை உருவாக்க சாப்பிட வேண்டிய சில பொருட்கள்.
  • நல்ல உடலைப் பெறுவதற்கு, ‘வே புரோட்டீன்’ என்ற புரதத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
  • சிறுநீரகத்தின் மீது மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
Gym Fitness பெற வேண்டுமா... டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோன்  நிறைந்த உணவுகள் அவசியம் title=

இன்றைய காலகட்டத்தில் அழகாக, பிட்டாக இருப்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால், பல நோய்கள் நம்மைச் சூழ்ந்துவிடும். ஜிம்மிற்கு செல்வதன் நோக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலர் நடிகர்களை போல் சிக்ஸ் பேக்ஸ் பெற விரும்புகிறார்கள். அவரைப் போல ஃபிட்டாக இருக்க நாம்  கடினமாக உழைக்க வேண்டும். ஒல்லியானவர்கள் பெரும்பாலும் ஜிம்மிற்கு சென்ற பிறகும் அப்படியே இருப்பார்கள். அவரது தசைகள் வலுப்பெற்று, சிக்ஸ் பேக்ஸ் உருவாவதில்லை இதற்கு காரணம் உங்கள் ஹார்மோன்கள். உங்கள் டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோன் அதிகரிக்காமல்  கட்டுடலை உடலை உருவாக்குவது மிகவும் கடினம்.

தசைகளை உருவாக்க  சாப்பிட வேண்டிய சில பொருட்கள்

1. மூலிகைகள்

பெரும்பாலும் உடலை கட்டுடலாக மாற்ற, சரியான நேரத்தில் சிறந்த மூலிகைகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்கள் உணவுத் திட்டத்தில் டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோன்களை அதிகரிக்கும் மூலிகைகள் மற்றும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஹார்மோன் மாற்றம் காரணமாக  காரணமாக உங்கள் தசைகள் வலுவடைந்து சிக்ஸ் பேக்ஸ் வெளிவரத் தொடங்கும்.

மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்

2. மூலிகை தேநீர்

ஜிம்மிற்குச் செல்வதற்கு முன் உங்கள் உடலுக்கு நல்ல அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. முழு கவனத்துடன் உடற்பயிற்சி செய்ய, இதற்காக நீங்கள் காலை அல்லது மாலை ஜிம்மிற்கு செல்லும் முன் கிரீன் டீ அல்லது பிளாக் காபியுடன் அவல் உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். தில் சிறந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. 

3. புரதம் நிறைந்த உணவுகள்

ஜிம்மிற்குச் செல்லும் பெரும்பாலானோர், நல்ல உடலைப் பெறுவதற்கு, ‘வே புரோட்டீன்’ என்ற புரதத்தை எடுத்துக் கொள்கின்றனர். அவ்வாறு செய்வது உங்கள் சிறுநீரகத்தின் மீது மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே உங்களால் முடிந்த அளவு இயற்கையான புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ள முயற்சிக்கவும். முட்டை, பன்னீர், வேகவைத்த கோழிக்கறி, கடலை வெண்ணெய், வேகவைத்த பீன்ஸ், ப்ரோக்கோலி என அனைத்துமே புரதச்சத்து நிறைந்த ஆதாரங்கள். இவை கட்டாயம் உங்கள் டயட்டில் இருக்கட்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News