உடல் பருமன் மளமளவென குறைய... ‘இந்த’ உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுங்க!

உடல் எடையை குறைக்க விரும்பினால், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த டயட் உணவுகளை நீங்கள் உட்கொண்டால், எடையைக் குறைக்கும் செயல்முறை இன்னும் வேகமாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 31, 2023, 10:44 AM IST
  • பசியைத் தணிக்கும் மற்றும் உங்கள் நாவிற்கும் சுவையான உணவுகளாக இருக்கும் டயட் கலவை .
  • பலர் முழு டயட் உணவு முறையை பின்பற்ற விரும்புவதில்லை.
  • இஞ்சி நமது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
உடல் பருமன் மளமளவென குறைய... ‘இந்த’ உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுங்க! title=

உடல் எடையை மிக வேகமாக குறைக்க, நீங்கள் சாப்பிடுவதை விட அதிக கலோரிகளை எரிக்கத் தொடங்கும் வகையில் உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை சமநிலைப்படுத்துவது அவசியம். ஆனால், டயட் உணவு சலிப்பாகவும், சுவையற்றதாகவும் இருப்பதாலும், காரமான மற்றும் வெளி உணவு எதையும் சாப்பிட முடியாது என்பதாலும், பலர் முழு டயட் உணவு முறையை பின்பற்ற விரும்புவதில்லை. ஆனால் அது அப்படி இல்லை. நீங்கள் விரும்பினால், நீங்கள் எப்போதாவது வெளியில் சாப்பிடலாம், ஆனால் அதை அடிக்கடி செய்வதைத் தவிர்த்து, உங்கள் உணவு அளவிலும் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் . நிபுணர்களின் கூற்றுப்படி, சில உணவுகளுடன்,  சில குறிப்பிட்ட உணவு சேர்க்கைகளை நீங்கள் முயற்சி செய்வது சிறப்பான பலன் கிடைக்கும். இது உங்கள் பசியைத் தணிக்கும் மற்றும் உங்கள் நாவிற்கும் சுவையான உணவுகளாக இருக்கும். அத்தகைய டயட் கலவை (Food Combinations) பற்றி தெரிந்து கொள்வோம்.

இஞ்சியுடன் தேன்

இஞ்சி நமது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் வீக்கம் குறையும். இஞ்சியை மட்டும் சாப்பிடுவது சிறிது காரமானதாகவும் சுவை குறைவானதாகவும் இருக்கும். ஆனால் அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடலாம். இஞ்சியின் காரமான ருசிக்கு ஈடாக இனிப்பையும் சிறிது புளிப்பையும் தரும் இது உடல் எடையை குறைக்கும் பர்பெக்ட் ஆன காம்பினேஷனாக இருக்கும். எலுமிச்சை உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது. அதனால் தான் இஞ்சி லெமன் டீ செய்து காலையில் குடிக்கலாம்.

வெள்ளரி அல்லது புதினாவுடன் எலுமிச்சை

வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை உட்கொள்வதன் மூலம், உடலில் தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படாது, மேலும் சிற்றுண்டி வடிவில் உணவு ஒன்றையும் பெறுவீர்கள். அதன் சுவையை இன்னும் கொஞ்சம் அதிகரிக்க, வெள்ளரிக்காயை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம். வேண்டுமானால் வெள்ளரிக்குப் பதிலாக புதினாவையும் பயன்படுத்தலாம். இந்த சாலட் உங்கள் தாகத்தைத் தணித்து, உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

மேலும் படிக்க | மல்டிகிரைன் பிரெட் உண்மையில் நல்லது தானா... நிபுணர்கள் கூறுவது என்ன!

பல்வேறு வகையான உலர் பழங்கள்

உலர் பழங்கள் அல்லது நட்ஸ்களில் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீங்கள் பாதாமை ஒரு சிற்றுண்டியாக சாப்பிடலாம். இது சிற்றுண்டிக்கு மிகவும் ஆரோக்கியமான விருப்பமாகும். நீங்கள் முந்திரி அல்லது அக்ரூட் பருப்புகள் அல்லது சில விதைகளுடன் பாதாம் போன்ற வேறு சில கொட்டைகளையும் சேர்க்கலாம்.

முட்டை அல்லது சிக்கன் கலந்த காய்கறிகள்

கீரை அல்லது கோஸ் போன்ற பச்சைக் காய்கறிகளுடன் முட்டைகளை உட்கொள்ளலாம். இதன் மூலம் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், உடலின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளும் பூர்த்தியாகும். இது தவிர, இந்த உணவை உட்கொள்வதன் மூலம் நீங்கள் நீண்ட நேரம் பசியை உணர மாட்டீர்கள், ஏனெனில் இந்த உணவு மிகவும் வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.

பெர்ரிகளுடன் இலவங்கப்பட்டை தூள்

இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. நீங்கள் பெர்ரிகளில் இருந்து ஆக்ஸிஜனேற்ற மற்றும் நார்ச்சத்துகளைப் பெறுவீர்கள். உங்கள் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு, நீங்கள் ஏதேனும் பெர்ரிகளை எடுத்து, அவற்றின் மீது இலவங்கப்பட்டை தூளை தூவி சாப்பிடலாம். பெர்ரிகளின் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை மற்றும் இலவங்கப்பட்டையின் மிகவும் கரமான சுவை ஆகியவற்றிற்கு இடையே ஒரு சமநிலை ஏற்பட்டு, சுவை மிகுந்த உணவாக இருப்பதைக் நீங்கள் காணலாம்.

குறிப்பு: இது போன்ற பல்வேறு உணவு சேர்க்கைகளை முயற்சிப்பதன் மூலம் உங்கள் சுவை உணர்வை திருப்தி படுத்துவதோடு, உடல் பருமனையும் குறைக்கலாம். இவை அனைத்தும் ஆரோக்கியமானவை. இதனை நீங்கள் பசியாக இருக்கும்போது அல்லது சிற்றுண்டி வடிவில், கொரிக்கும் வகையில் மட்டுமே அவற்றை உட்கொள்கிறீர்கள். எனவே முக்கிய உனவிற்கான டயட்டை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

மேலும் படிக்க | தினம் ஒரு எலுமிச்சை போதும்... நோய்கள் உங்களை அண்டாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News