எந்தவொரு இளம் வயதினரும் அதாவது 25 முதல் 30 வயதில் தங்கள் தலைமுடி வெள்ளையாக மாற விரும்புவதில்லை, ஆனால் தற்போதைய காலகட்டத்தின் விசித்திரமான வாழ்க்கை முறை மற்றும் தலைகீழ் உணவுப் பழக்கங்கள் காரணமாக, இதுபோன்ற பிரச்சினைகள் பொதுவானதாக மாறிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், பலர் ரசாயனங்கள் நிறைந்த ஹேர் டையை பயன்படுத்துகின்றன. இதனால் அவர்களது முடி சேதமடைகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வாக இயற்கை மற்றும் வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதே சிறந்த வழியாகும். எனவே இளம் வயதிலேயே ஏற்படும் வெள்ளை முடியை அடியோட ஒழிக்க இங்கே கொடுக்கப்பட்ட செயல்முறை பின்பற்றவும். இதன் மூலம் உங்களது வெள்ளை முடி ஈசியாக கருப்பாகும்.
நரை முடிக்கு ஆயுர்வேத சிகிச்சை
இளம் வயதில் வெள்ளை முடிக்கு ஆயுர்வேத சிகிச்சையை நீங்கள் தேடுகிறீர்களானால், நீங்கள் ஆளி விதையை முயற்சி செய்யலாம், ஏனெனில் இது உங்களுக்கு லாபகரமான ரிசல்ட்டை பெற்று தரும். முடி பராமரிப்புக்கு இந்த விதாயை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது
ஆளி விதை ஏன் முக்கியமானது?
ஆளி விதையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவற்றை சாலட் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம். அதேபோல் முடியின் அடிப்படையில் ஆளிவிதை ஒரு சிறப்பு உணவை விட குறைந்தது இல்லை என்றே கூறலாம். இதன் காரணமாக உச்சந்தலையில் ஈரப்பதம் ஏற்பட்டு கூந்தல் பளபளப்பாகும்.
ஆளிவிதை முடி மாஸ்க்: எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்
நீங்கள் ஆளிவிதையின் ஹேர் மாஸ்க்கை தயார் செய்து, தலைமுடியில் தடவி உலரும் வரை காத்திருந்து, பின்னர் சுத்தமான தண்ணீரில் கொண்டு தலை முடியை கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
ஆளி விதை ஹேர் மாஸ்க் செய்வது எப்படி
ஆளி விதையால் கொண்ட ஹேர் மாஸ்க் செய்ய நான்கு கப் தண்ணீரில் ஒரு கப் ஆளிவிதைகளை எடுத்துக்கொள்ளவும், இப்போது அவற்றை நன்கு கொதிக்கவைத்து, விதைகளை பருத்தி துணியில் போர்த்தி பிழியவும். இப்போது அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தவும்.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ