உடல் பருமனை ஓட ஓட விரட்டும் பழங்கள் இவைதான்... ஜிம், டயட் எதுவும் தேவையில்லை!!

Fruits For Weight Loss: தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் சில பழங்களை உட்கொண்டால், கண்டிப்பாக எடை குறையும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 7, 2023, 09:16 AM IST
  • பழங்கள் பெரும்பாலும் உணவின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றன.
  • இவற்றில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
  • அவை ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன.
உடல் பருமனை ஓட ஓட விரட்டும் பழங்கள் இவைதான்... ஜிம், டயட் எதுவும் தேவையில்லை!! title=

உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக எடை கொண்டவர்கள் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக எடை கொண்ட ஒருவர் 4-5 கிலோ எடையைக் குறைத்தாலும், பல நாள்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 

எடை இழப்புக்கு பழங்கள்

பழங்கள் பெரும்பாலும் உணவின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றன. இவற்றில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன. மேலும் உடலை நோய்களிலிருந்து விலக்கி வைப்பதில் பழங்கள் பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் சில பழங்கள் குறிப்பாக கொழுப்பை எரிக்க உதவுகின்றன. தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் சில பழங்களை உட்கொண்டால், கண்டிப்பாக எடை குறையும். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட ஆரம்பிக்கலாம்.

எடை இழப்புக்கு உட்கொள்ள வேண்டிய பழங்கள்

பப்பாளி

உடல் எடையை குறைக்க பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். பப்பாளியில் உள்ள பப்பைன் என்சைம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால், கொழுப்பு எரிய ஆரம்பிக்கும். இதில் நல்ல அளவு வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது.

அவகேடோ 

அவகேடோ பழத்தில் எடையை குறைக்கும் பல கூறுகள் உள்ளன. இதை உட்கொள்வது பல நாள்பட்ட நோய்களின் அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும் படிக்க | காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகளா?

வாழைப்பழங்கள்

வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை. வாழைப்பழத்தை போதுமான அளவிலும், குறைந்த அளவிலும் சாப்பிட்டால், அவை எடையைக் குறைப்பதில் அற்புதமான விளைவை ஏற்படுத்தும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் வித்தியாசத்தை நீங்களே பார்க்கலாம். வாழைப்பழத்தில் பொட்டாசியம், இயற்கையான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது.

ஆப்பிள்

அனைவரும் சாப்பிட பரிந்துரைக்கும் பழம் ஏதேனும் இருந்தால், அந்த பழம் ஆப்பிள்தான். பெக்டினுடன், ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இது எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன.

தர்பூசணி

எடை குறைக்கும் பழங்களில் தர்பூசணியும் சேர்க்கப்பட்டுள்ளது. இது நீர்ச்சத்து நிறைந்த பழமாகும், இது உடலில் நீர் பற்றாக்குறையை அனுமதிக்காது. தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தையும் பாதுகாக்கும். இதை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு குறையும்.

பேரிக்காய்

பேரிக்காய் நல்ல செரிமானத்தை பெறுவதற்கும் எடை இழப்பை பராமரிப்பதிலும் நல்ல விளைவைக் கொண்டுள்ளது. பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அதை சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பதோடு, அதிகமாக, தேவையற்ற உணவை சாப்பிடுவதையும் நாம் தவிர்க்கலாம். 

மேலும் படிக்க | தினம் இரண்டு ஏலக்காய்.. பல வித நோய்களை தெறிச்சு ஓட செய்யும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News