டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை தூண்டி பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் பூண்டு - வெங்காயம்!

ஆண்கள் வயதுக்கு வரும் நிகழ்வை உடல் ரீதியாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஏற்படுத்துகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தி அதிகரிப்பதன் காரணமாக ஆண்களுக்கு அந்தரங்க பாகங்களில் முடி, முகங்களில் தாடி மீசை, குரலில் மாற்றம், பரந்த மார்பக வளர்ச்சி ஆகியவை ஏற்படுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 22, 2023, 09:37 PM IST
  • பாலியல் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவரது திருமண வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும்.
  • எளிமையாக வீட்டு வைத்தியம் மூலமாக விரும்பிய தீர்வைப் பெறலாம்.
  • விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் மேம்படும்.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை தூண்டி பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் பூண்டு - வெங்காயம்! title=

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஆண்களின் முக்கியமான பாலுறவு ஹார்மோன் ஆகும். இது உயிரை உருவாக்கும் சக்தி வாய்ந்த ஹார்மோனாக பார்க்கப்படுகிறது. ஒரு ஆண் குழந்தை பிறப்பதற்கு முன்பே கருவாக இருக்கும்போதே உடலில் டெஸ்டோஸ்டிரோன் கூர்முனை ஏற்படுகிறது. அதன் பிறகு பிறந்து பல ஆண்டுகள் கழித்து அதன் பதின் பருவத்தில் இதன் உற்பத்தி அதிகரிக்கிறது. அதுவரை சிறுவர்களாக இருந்தவர்களை அது ஆண்களாக மாற்றுகிறது. ஆண்கள் வயதுக்கு வரும் நிகழ்வை உடல் ரீதியாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஏற்படுத்துகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தி அதிகரிப்பதன் காரணமாக ஆண்களுக்கு அந்தரங்க பாகங்களில் முடி, முகங்களில் தாடி மீசை, குரலில் மாற்றம், பரந்த மார்பக வளர்ச்சி ஆகியவை ஏற்படுகின்றன.

திருமணமான ஆண்களுக்கு விறைப்புத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, மோசமான விந்தணுக்களின் தரம் போன்ற பாலியல் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவரது திருமண வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, தந்தையாகும் கனவு கூட நிறைவேறாமல் போக்கும். திருமணமான ஆண்களுக்கு விறைப்புத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, மோசமான விந்தணுக்களின் தரம் போன்ற பாலியல் பிரச்சனைகள் திருமண வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். பாலியல் பிரச்சனைகளால் திருமண வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, தந்தையாகும் கனவு கூட நிறைவேறாமல் போகும். 

ஆண்மைக் குறைவு, விந்தணு எண்ணிக்கைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு பாலியல் பிரச்சனை காரணமாக திருமணம் வாழ்க்கை தோல்வியுறும் அபாயம் உள்ளது. பாலியல் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அதிக செலவும் பிடிப்பதாக உள்ளது. இதற்கு எளிமையாக வீட்டு வைத்தியம் மூலமாகவும் விரும்பிய தீர்வைப் பெறலாம். வெங்காயம், பூண்டு சாப்பிடுவதால் ஆண்மை பலம் அதிகரித்து உடல் பலவீனம் நீங்கில், பல பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெங்காயம் சாப்பிடுவதால் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிப்பதே இதற்கு காரணம். 

மேலும் படிக்க | ’கோடை ஆப்பிள்’ நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

பூண்டு உண்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் மேம்படும். பூண்டினால் மலட்டுத்தன்மை நீங்கும். பூண்டை உட்கொள்வது ஆண்களின் வலிமையை அதிகரிக்கிறது. ஏனெனில் அதில் அல்லிசின் கலவை உள்ளது. வெங்காயம் ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உட்கொள்வது ஆண்களின் பிறப்புறுப்புகளை வலுப்படுத்துகிறது. பாலியல் இச்சை அதிகரிக்கிறது. ஆண்மைக்குறைவை நீக்க வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்த சட்னி மிகவும் கை கொடுக்கும். இது திருமண வாழ்க்கையில் சுவையை சேர்க்கும். தேவையான வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை நன்றாக வதக்கி, அதில் , சிறிது உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | இந்த 7 விஷயங்கள் செய்தால் போதும்..அடி வயிறு தொப்பை ஐஸ் போல் கரையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News