மதிய உணவிற்கு சாலட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: காலை உணவைப் போலவே, மதிய உணவும் நமது நாளின் முக்கியமான உணவாகும். பகலில் ஆரோக்கியமான மற்றும் சுவையான மதிய உணவை சாப்பிட்டால், நாள் முழுவதும் வேலை செய்யும் ஆற்றல் கிடைக்கும். பொதுவாக மக்கள் மதிய உணவில் காய்கறி, ரொட்டி மற்றும் சாதம் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் மதிய உணவிற்கு சாலட்டையும் சேர்த்துக்கொள்ள பெரும்பாலும் மறந்துவிடுகிறார்கள். சாலட் நமது உணவில் மிகவும் முக்கியமான ஒரு அங்கமாகும். மதிய உணவில் சாலட் உட்கொள்வதால் ஏற்படும் சில நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மதிய உணவில் சாலட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
போதுமான நார்ச்சத்து
பல வகையான காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் சாலட்டில் பல வகையான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். இது செரிமான அமைப்பு சரியாக வேலை செய்யவும் உதவுகிறது.
எடை பராமரிப்பு
சாலட்டை உணவில் சேர்த்துக்கொள்வது உடலில் நல்ல அளவு நார்ச்சத்தை வழங்குகிறது. இது அதிக கலோரிகளை உட்கொள்வதில் இருந்து உங்களை காப்பாற்றுகிறது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
கண்களுக்கு உதவும்
கீரை அல்லது சிவப்பு கீரையை சாலட்டில் சேர்த்தால், அது உங்கள் கண்களுக்கு நன்மை பயக்கும். வைட்டமின்கள் போன்ற பல சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கும் கண்களுக்கும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | Uric Acid அதிகரித்தால் ஜாக்கிரதை, இந்த நோய்கள் வரலாம்: நிவாரணம் பெற வழி இதோ
காய்கறிகளின் சத்துக்கள் உடலில் சேரும்
வெங்காயம், தக்காளி, வெள்ளரி, முள்ளங்கி போன்ற பல வகையான காய்கறிகளை சாலட்டில் சாப்பிடுவதால், உடலுக்கு நன்மை செய்யும் பல வகையான தாதுக்கள் கிடைக்கும்.
செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்
மதிய உணவில் சாலட் சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. சாலட் எடுத்துக்கொள்வதன் மூலம், தேவையற்ற உணவை உட்கொள்வதைத் தவிர்க்கிறீர்கள். இதனால் வாயுத் தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற பிரச்சனைகள் இருக்காது. இதன் காரணமாக, வயிறு கனமாக இல்லாமல் இருக்கும். மேலும் இதில் உள்ள அதிக நார்ச்சத்து காரணமாக, செரிமான அமைப்பும் நன்றாக வேலை செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோய் இருக்கா உங்களுக்கு? வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ