Health Tips, Foods For Sweet Cravings: பலருக்கும் இனிப்புகளை சாப்பிடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். லட்டு, அல்வா, பால்கோவா, குலாப் ஜாமுன் என இனிப்புகள் மட்டுமின்றி டீ, காபியில் சர்க்கரை அதிகமாக குடிப்பது தொடங்கி தினமும் அதிகம் இனிப்புகளை எடுத்துக்கொள்வார்கள். இவர்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என ஆசை இருந்துகொண்டே இருக்கும்.
குறிப்பாக, மன அழுத்தம், வானிலை மாற்றங்கள், மனநிலை மாற்றங்கள் ஆகியவையும் கூட சிலருக்கு இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையை தூண்டும். அந்த ஆசையை கட்டுப்படுத்துவதும் கடினம். அவர்களின் நாக்கு அந்த இனிப்பு சுவைக்கு அடிமையாகிவிடும்.
இனிப்பு ஆசையை அடக்கும் 5 உணவுகள்
அதிகம் இனிப்புகளை எடுத்துக்கொள்வது இதய பிரச்னைக்கு வழிவகுக்கும், உடல் எடை அதிகரிக்கும், ஆற்றல் குறையும். பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கும். எனவே இனிப்புகளை குறைவாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும். சாப்பிடவே வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் அதனை அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற மனநிலைக்குச் செல்ல வேண்டாம். அந்த வகையில், இந்த 5 உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இனிப்புகளை சாப்பிட்டே ஆக வேண்டும் என உணர்வு மட்டுப்படும். அதுகுறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க | இந்த 5 உணவுகளை காலையில் எடுத்து கொள்ள வேண்டாம்! அதிக சிரமம் தரும்!
பெரீஸ்
உங்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை எடுத்தால் ப்ளூபெரீஸ், ஸ்ட்ராபெரீஸ் போன்ற பெரீஸ்களை சாப்பிடுங்கள். இது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையை ஆற்றும். இவற்றில் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம், நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் அதிகம். இதில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருக்கிறது. இதனை அதிகம் சாப்பிட்டாலும் குறைவான கலோரியை தான் உட்கொள்வீர்கள் என்பதும் கவனத்திற்கு உரியது.
டார்க் சாக்லேட்
இதில் ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றன. இவை உங்களின் இனிப்பு ஆசையை கட்டுப்படுத்தும். இதில் குறைந்த சர்க்கரையே சேர்க்கப்பட்டிருக்கும். இதில் உள்ள 70% கோக்கோ உங்களது இனிப்பு ஆசையை அடக்குவதில் மட்டுமின்றி சமச்சீரான உணவுமுறைக்கும் உபயோகமாக இருக்கும்.
கிரீக் யோகர்ட்
இதில் அதிக புரதச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கின்றன. இதனால் வயிறு நிறைந்த மற்றும் திருப்தியான உணர்வு ஏற்படும். இத்துடன் பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளலாம்.
நட்ஸ், விதைகள்
இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக, பாதாம், பூசணி விதைகள், சியா விதைகள், முந்திரி ஆகியவை இதில் உங்களுக்கு கைக்கொடுக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
இதில் கார்ப்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமிண்கள் நிறைந்திருக்கின்றன. இதனால் ஆற்றலும் கிடைக்கும், வயிறு நிறைவும் உண்டாகும். இதில் உள்ள இயற்கையான இனிப்பு சுவை உங்களின் இனிப்பு ஆசையை அடக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 2025: புது வருடத்தில் பிரகாசமான பொலிவு பெற உங்களுக்கான சிம்பிள் 8 டிப்ஸ் இதோ !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ