இன்றைய கால கட்டத்தில், வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாகி விட்டது. எனினும் ஒரு புறம் பிட்னஸ் குறித்து அதிகம் கவனம் செலுத்தும் நபர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாகவும் பிட் ஆகவும் வைத்திருக்கவே விரும்புகிறார்கள். அதனால் சிலர் தங்கள் உடல் பருமன் குறித்து மிகவும் கவலைப்படுகிறார்கள். உடலின் எந்தப் பகுதியிலும் படிந்திருக்கும் கொழுப்பு உங்கள் தோற்றத்தைக் கெடுத்துவிடும். அதிலும் தொப்பை உங்கள் அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அதிலிருந்து விடுபட விரும்பினால், வீட்டிலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்யலாம். தொப்பையை குறைக்க என்னென்ன பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
தொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள்
பர்பி உடற்பயிற்சி
தொப்பையை குறைக்க வேண்டுமானால் பர்ஃபி உடற்பயிற்சி (Burpee Exercise) செய்யலாம். பர்ஃபி உடற்பயிற்சி தொப்பையை கரைப்பதோடு, உங்கள் மார்பு, தோள்கள் மற்றூம் இடுப்பை வலிமையாக்குகிறது. மேலும் எடையை குறைக்க உதவுகிறது. இந்தப் பயிற்சியைச் செய்ய, நேராக நிற்கவும். இதற்குப் பிறகு, உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் இரு கைகளையும் தரையில் வைக்கவும். உள்ளங்கையில் எடையை போட்டு, பாதங்களை பின்னோக்கி உதைத்து புஷ்அப் நிலைக்கு வரவும். இப்போது பின் பக்கத்திலிருந்து கால்களை நகர்த்தவும். இதற்குப் பிறகு, கால்களை மீண்டும் கைகளுக்கு அருகில் கொண்டு வாருங்கள். இடுப்பு வளைந்து இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு எழுந்து நின்று கொள்ளவும். இதனை, 10 முறை செய்யவும்.
மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
போசு பந்து (bosu ball) உடற்பயிற்சி
தினமும் போசு பந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம், தொப்பையை எளிதில் குறைக்கலாம். இதைச் செய்ய, உங்களுக்கு போசு பந்து தேவைப்படும். இதன் போது, போசு பந்தை தரையில் வைக்கவும், அதன் பிறகு உங்கள் கால்களை நேராக நீட்டி வைத்துக் கொண்டு குனிந்து , போசு பந்தின் பக்கங்களில் உங்கள் கைகளை வைக்கவும். இந்த நிலையில், உங்கள் கால்களின் கால்விரல்கள் தரையில் இருக்க வேண்டும். இப்படி செய்யும் போது, உங்கள் முழு உடலும் போசு பந்தின் மேலே இருக்கும், அதன் பிறகு நீங்கள் அதனை பிடித்துக் கொண்டு புஷ்அப்களை செய்தால், தொப்பை எளிதில் கரையும்.
மவுண்டன் கிளைம்பர் உடற்பயிற்சி (Exercise) மார்பு தசைகளை வலுப்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். இது தொப்பை கொழுப்பை விரைவாக குறைக்க உதவுகிறது. மவுண்டன் கிளைம்பர் உடற்பயிற்சி செய்ய, புஷ்அப் நிலைக்குச் சென்று, வயிற்று தசைகளை இறுக்கி, இடுப்பை நேராக வைக்கவும். இதற்குப் பிறகு, வலது முழங்காலை முடிந்தவரை மார்புக்கு அருகில் கொண்டு வாருங்கள். இப்போது வலது முழங்காலை பின்னால் எடுத்துச்சென்று, இடது முழங்காலை மார்பை நோக்கி கொண்டு வரவும். இதேபோல், வேகமாக சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை அசைக்க முயற்சி செய்யுங்கள்.
பொதுவாகவே உடற்பயிற்சிகள் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு தொடர்ந்து யோகா செய்வதால் மன அமைதியும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். யோகா உடலை வலுவாகவும், பிட்டாகவும் மாற்ற உதவுகிறது. அந்த வகையில், தொப்பையை குறைக்க மேலே கூறிய ஆசனங்கள் பெரிதும் உதவுகிறது. எனினும் முதுகு வலி இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறாமல்., இதனை ஒருபோதும் செய்யாதீர்கள். அறுவை சிகிச்சை, குறிப்பாக வயிற்று அறுவை சிகிச்சை செய்தாலும் இந்த பயிற்சிகளை செய்யக் கூடாது. கர்ப்பிணிகளும் இந்த பயிற்சிகளை செய்யக்கூடாது.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை கடைபிடிக்கும் முன் நிபுணர்களிடம் ஆலோசனை செய்யவும்)
மேலும் படிக்க | மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ