Health Tips For Winter Season: தற்போது மார்கழி மாதம் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பனிக்காலம் தீவிரமடைந்துவிட்டது. மார்கழி மாத அதிகாலை பனி உடல்நலத்தையும் பாதிக்கும். குளிர்காற்றால் உங்களுக்கு சளி, மூக்கடைப்பு, இருமல், தொண்டை வலி, அதீத தும்மல், மூச்சுக் கோளாறு ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம். எனவேதான், வீடுகளில் பனிக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சமைப்பார்கள்.
அப்படியிருக்க பனிகாலங்களில் ஏற்படும் இந்த சளி, காய்ச்சல் ஆகியவற்றை எதிர்த்து சண்டையிட இயற்கையான நிவாரணிகளாக இருப்பது சுடு தண்ணீர், தேன் மற்றும் எலுமிச்சை பழம் எனவாம். இவற்றை நீங்கள் சேர்த்து எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் பனிக்காலத்தில் சளி என்ற பிரச்னையே உங்களை எட்டிப்பார்க்காது. உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சீராக இருக்கும். தேன், எலுமிச்சைப் பழம், சுடுதண்ணீர் ஆகியவற்றை கலந்து நீங்கள் தினமும் குடித்தால் அதிக பலன்கள் உண்டாகும்.
இந்த பானத்தை தயார் செய்வது எப்படி?
ஒரு கப் தண்ணீரை சூடு செய்யவும். அதிகமாக கொதிக்கவைக்கக் கூடாது. மிதமான சூட்டில் இறக்கிவிடுங்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அதில் பாதி எலுமிச்சைப் பழத்தை நன்கு பிழிந்துவிடுங்கள். பின்னர் நன்கு கலந்து மிதமான சூட்டிலேயே மெதுவாக குடித்தால் அது உங்களுக்கு நல்ல ஆறுதலை தரும்.
மேலும் படிக்க | காலை உணவில் செய்யும் 4 தவறுகள் LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்..!
இதனை எப்போது குடிக்கலாம்?
நீங்கள் இதை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம், குறிப்பாக உங்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் குடித்தால் அது நிவாரணமாக அமையும். தொண்டையில் பிரச்னை அல்லது வயிற்று வலி என்றாலும் இதை குடிக்கலாம். குறிப்பாக, இதனை காலைக் கடன்களை முடித்த உடன் வெறும் வயிற்றிலேயே மக்கள் அதிகமாக குடிப்பார்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்தபின்னர் கூட இதை குடிக்கலாம். இதில் உள்ள கார்போஹைரேட்ஸ் உங்களுக்கு ஆற்றலை அளித்து, தசைகளை வலுவாக்கும்.
சுடுதண்ணீர் + தேன் + எலுமிச்சைப் பழம் - நன்மைகள் என்னென்ன?
- தேனில் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பதாலும், கிருமி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாலும் அது அலர்ஜிகளை எதிர்த்து போராடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இதனால் வலுவாகிறது.
- வழக்கமாக டீ, காபி குடிப்பதற்கு பதில் ஆற்றலை அதிகரிக்க இந்த சுடுதண்ணீரில் தேன், எலுமிச்சை கலந்து குடிப்பதும் நல்லதுதான்.
- இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தையும் நிலைநாட்டுகிறது. பருக்கள் வருவதை குறைத்து, சருமம் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் தோற்றமளிக்க உதவும்.
- இதனை குடித்தால் வயிறு சார்ந்த பிரச்னையும் ஓடோடிவிடும். வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். செரிமானம் நலமாகும். வயிற்றில் இயற்கையாகவே அமிலம் உற்பத்தியாக ஏதுவாக இருக்கும்.
- மிக முக்கியமாக இது வீக்கத்தையும், கொலஸ்ட்ரைலையும் குறைக்கும் என்பதால் இதயத்திற்கும் ஆரோக்கியமானதாகும். இதனால், இதயம் சார்ந்த நோய்கள் வரும் ஆபத்து குறையும்.
- சுடுதண்ணீர் மற்றும் தேன் உங்களின் உடல் கொழுப்புகளை கரைக்கும் வல்லமை கொண்டவை. அதிகமான பசியை தூண்டும் ஹார்மோன்களை தேன் கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் நீங்கள் அதிகமான கலோரிகளை உட்கொள்ள மாட்டீர்கள். இது உடல் எடை குறைப்புக்கு சிறப்பாக உதவும்.
(பொறுப்பு துறப்பு:இவை அனைத்தும் வீட்டு வைத்தியங்கள், பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | இந்த இலைகளை சாப்பிட்டால் ஹெல்தியான வாழ்க்கை உறுதி... ஆனால் ஒரு கண்டிஷன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ