மஞ்சள் போன்ற ஒரு மசாலா இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் எளிதாக கிடைக்கக்கூடிய பொருளாகும், அதன் நன்மைகளைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம், ஏனெனில் இது பழங்காலத்திலிருந்தே ஆயுர்வேத மருந்துகளாக அறியப்படுகிறது. பொதுவாக பல வகையான மசாலா பொறுகள் உள்ளன, ஆனால் இதில் மஞ்சள் மட்டும் மிகவும் பிரபலமான மசாலாப் பொருட்களாக கருதப்படுகிறது. மேலும் காயங்களை உலர்த்துவதற்கு இது பெரும்பாலும் இரவில் பாலுடன் உட்கொள்ளப்படுகிறது. அத்துடன் இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் எல்.டி.எல், இரத்த ஓட்டம், உடல் செல்கள் முறிவு ஆகியவற்றிற்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, எனவே இத்தனை நன்மைகள் கொண்ட மஞ்சளில் சில தீமைகளும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் மஞ்சளின் நுகர்வு எவ்வாறு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
சிறுநீரகக் கற்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
மஞ்சளை குறைந்த அளவில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது, ஆனால் அதன் நன்மைகளைப் பற்றி சிந்தித்து அதை அதிகமாக உட்கொண்டால், அதில் உள்ள ஆக்சலேட்டின் அளவு நம் உடலில் சிறுநீரகக் கற்களை உண்டாக்குகிறது. எனவே சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை குறைந்த அளவிலே உட்கொள்ளவும்.
மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்
மஞ்சள் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்
பெரும்பாலும் வெளி உணவு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தாது, ஆனால் அதிகப்படியான மஞ்சள் இந்த சிக்கலை மோசமாக்கும், ஏனெனில் அதில் குர்குமின் உள்ளது, இது நம் வயிற்றில் உள்ள இரைப்பை குழாய் சரியாக வேலை செய்யாமல் தடுக்கிறது, இதன் காரணமாக வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட தொடங்குகிறது.
இரும்புச்சத்து குறைபாடு (மஞ்சள் இரும்பின் அளவைக் குறைக்கும்)
இன்றைய உணவின் காரணமாக உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நம் உடலுக்கு கிடைப்பதில்லை. இதனால் நம்மை நோய்கள் எளிதாக சூழ்ந்து விடுகிறது. பொதுவாக நம் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருந்தால், ரத்தப் பற்றாக்குறை ஏற்பட துவங்கும். ஆனால் மஞ்சளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் இருக்கும் இரும்புச் சத்து உலரத் தொடங்குகிறது, இதன் காரணமாக பலவீனத்துடன், மற்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும்.
ரத்தத்தை மெலிதாக்க செய்கிறது
மஞ்சள் உடல் சுத்திகரிப்பின் போது ரத்தம் மெலிதல் உண்டாகிறது. குறிப்பாக ரத்த மெலிப்பு மருந்துகள் எடுத்துகொள்பவர்கள் மஞ்சளை அதிகம் எடுக்கும் போது இந்நிகழ்வு அதிகமாக பாதிக்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே மஞ்சளை குறைத்து அல்லது தவிர்க்க வேண்டும். ஏனெனில் மஞ்சள் சிகிச்சையின் போது இரத்த உறைதலை தாமதப்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: இந்த இயற்கை பானத்தின் உதவியுடன் எடை குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ