இஞ்சி ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ள உணவுப் பொருள். நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ள உணவுப் பொருட்களில் இஞ்சி முதன்மையானது. காரணம், இது உடலில் கொழுப்பு சேராமல் இருக்கவும், செரிமானம் சிறக்கவும், இரத்தம் ஆரோக்கியமாக இருக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.
செரிமானத்தை சீராக்குவது மட்டுமின்றி, பசியை குறைக்கும் உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறையவில்லை என்றால், என்ன முயற்சி செய்தாலும் உடல் பருமனை குறைக்க முடியாது. தினமும் கால் டீஸ்பூன் இஞ்சி எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.
வாயுத்தொல்லையில் இருந்து தீர்வுப்பெற ஒரு சிறந்த உணவுப் பொருள் இஞ்சி. இது செரிமானத்தை சீராக்கி, இரைப்பை வலுப்படுத்தி, வாயுத்தொல்லை உண்டாகாமல் தடுக்கிறது. மேலும், இது நச்சுக்களை நீக்கவும் பெருமளவு உதவுகிறது.
கார்டிசோல் என்பது ஸ்ட்ரஸ் ஹார்மோன் ஆகும். இஞ்சியை சேர்த்துக் கொள்வதால் இந்த ஹார்மோனை கட்டுப்படுத்த முடியும். நீங்கள் கொழுப்பு அதிகமான உணவு உட்கொள்வதன் மூலமாக அதிக ஸ்ட்ரஸ் அடைகிறீர்கள்.எனவே, உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
இத்தகைய நன்மை வாய்ந்த இஞ்சியை ஒதுக்காமல், தினமும் காலையில் சூடான தண்ணியில் சேர்த்து சற்று நேரம் வேக வைத்து வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.