புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வசதியை பெறுவது மிகவும் சுலபமானது.
பொது மக்களுக்கு இலவச சுகாதார வசதிகளை வழங்குவதற்காக செப்டம்பர் 2018 இல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவில் 5 லட்சம் ரூபாய் வரையிலான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.
சுகாதாரம் தொடர்பான வசதிகளை மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக, மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் அட்டையை (Ayushman Bharat Card) வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கார்டுதாரருக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
READ ALSO | ஆதார் அட்டை போலவே தனித்துவமான ஹெல்த் அட்டை!
தகுதியுடையவர்களுக்கு மட்டுமே இந்த அட்டை கிடைக்கும். ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். ஆயுஷ்மான் பாரத் அட்டையில் பல வகையான வசதிகள் உள்ளன. சில நடைமுறையைப் பின்பற்றி இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆயுஷ்மான் பாரத் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரை உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக (Health Insurance) உள்ளது. இத்திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கிறது.
இருப்பினும், ஆயுஷ்மான் கார்டு தொடர்பாக பல மோசடி வழக்குகள் அம்பலமாகியுள்ளன. எனவே, உங்கள் பெயரில் வேறு யாருக்காவது ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை அவ்வப்போது சரி பார்க்கவும். அப்படி ஏதாவது நடந்திருந்தால், கண்டிப்பாக அதைப் பற்றி புகார் செய்ய வேண்டும்.
READ ALSO | தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது
உங்கள் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கு https://pmjay.gov.in/ என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
இப்போது உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும், இப்போது ஆதார் எண்ணை உள்ளிட்டு தொடரவும். அடுத்த பக்கத்தில் உங்கள் கட்டைவிரல் பதிவை சரிபார்க்க வேண்டும்.
இப்போது 'அங்கீகரிக்கப்பட்ட பயனாளி' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்போது அங்கீகரிக்கப்பட்ட அட்டைகளின் பட்டியலைக் காண்பீர்கள்.
இந்த பட்டியலில் உங்கள் பெயரைக் கண்டுபிடிக்கவும்.
அதிலுள்ள விவரங்களை சரி பார்க்கவும்.
உங்களுடைய விவரங்களுக்கு பதிலாக வேறு விவரங்கள் இருந்தால், உடனடியாக புகாரளிக்கவும்.
Also Read | பட்ஜெட் தயாரிப்புகள் தீவிரம்! தனியார் துறையினரிடம் மத்திய அரசு ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR