5G உங்களுக்கும் அலர்ஜியாகலாம் தெரியுமா? இதோ உதாரணம்...

சொல்போன், மின்சாரம் இல்லாத வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் கற்பனைக்கூட செய்து பார்க்க மாட்டார்கள். செல்போன் மற்றும் கரண்ட் இரண்டுமே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் புருனோ பாரிக் (Bruno Barrick) என்ற பிரிட்டன்வாசி.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 28, 2020, 09:54 PM IST
  • மின்சாரம் மற்றும் கைப்பேசியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அலர்ஜியை ஏற்படுத்துகிறது.
  • அந்த நோய்க்கு எலக்ட்ரோ சென்சிட்டிவிட்டி என்று பெயர்
5G உங்களுக்கும் அலர்ஜியாகலாம் தெரியுமா? இதோ உதாரணம்... title=

நவீன தொழில்நுட்பங்கள் நமது வாழ்வை எளிதாக்கியுள்ளது. சொல்போன், மின்சாரம் இல்லாத வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் கற்பனைக்கூட செய்து பார்க்க மாட்டார்கள்.
அனைவருக்கும் வசதிகளை கொடுக்கும் தொழில்நுட்பத்தின் எதிர்மறையான பகுதியும் இருக்கிறது. மின்சாரம் கைப்பேசி இரண்டுமே ஒவ்வாமை ஏற்படுத்தும்

செல்போன் மற்றும் கரண்ட் இரண்டுமே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் புருனோ பாரிக் (Bruno Barrick) என்ற பிரிட்டன்வாசி.

48 வயதான புருனோ பாரிக்குக்கு மின்சாரம் மற்றும் மொபைல் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. அது எப்படி என்று ஆச்சரியமாக உள்ளதா? மின்சாரம் மற்றும் கைப்பேசியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அவருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இந்த நோயை எலக்ட்ரோ சென்சிட்டிவிட்டி (Electrosensitivity) என்று அழைக்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நம்மைப் போலவே இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார் புருனோ பார்க். அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டபோது, மருத்துவர்களை அணுகினார். பல்வேறு சிகிச்சைகள், தொடர் பரிசோதனைகளுக்குப் பிறகு புருனோவுக்கு எலக்ட்ரோ சென்சிட்டிவிட்டி (Electrosensitivity) நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மருத்துவர்களின் அறிவுரையின்படி கடந்த நான்கு ஆண்டுகளாக  இவர் செல்போன், மின்சாரம், கதிர்வீச்சு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். உலகில் 4% மக்களுக்கு எலக்ட்ரோசென்சிடிவிட்டி நோய் பாதிப்பு ஏற்படுகிறது.  

புருனோ பாரிக் திருமணமானவர், மூன்று குழந்தைகளும் உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்னர், செல்போன் டவர் இருக்கும் இடத்தில் பறவைகள் வருவது குறைந்துவிட்டது என்ற சர்ச்சைகள் எழுந்தன. செல்போன் போன்ற சாதனங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு யாரையும் பாதிக்காது என்று சொல்வது கடினம் தான். இன்று ஒருசிலருக்கு மட்டுமே இந்த நோய் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அவர் சிறையில் இருப்பது போல இருக்கிறார். மின்சாரத்தினால் ஏற்படும் பிரச்சனையை குறைக்க சிறப்பு வகை வீடு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். தனது வீட்டில்  அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்படும் போது அவர் இந்த வீட்டிற்கு வந்துவிடுவார். 

அவருக்கு அருகில் இருக்கும் யாராவது மொபைலைப் பயன்படுத்தினாலும் புருனோவுக்கு அலர்ஜி ஏற்படும். நான்கு ஆண்டுகலூக்கு முன்னர் புருனோவுக்கு பல நோய்களால் ஏற்பட்டன. அப்போது அவர் வீட்டில் ஸ்மார்ட் டிவி, வைஃபை இணைப்பு மற்றும் இணைய இணைப்பு இருந்தது, ”என்றார்.

இந்த நோய்க்காக பல மருத்துவர்களை சந்திக்க உலகம் முழுவதும் பயணித்துள்ளார். அவர்களில் ஒரு மருத்துவர், மின்சாரம், மொபைல்கள் மற்றும் இணைய கதிர்வீச்சிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார். அந்த அறிவுரை தான் புருனோ பாரிக்கிற்கு பலனளித்துள்ளது. 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் 

தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News