தூங்கும் முன் மறந்து கூட இந்த 3 பொருட்களை சாப்பிடாதீர்கள்

Do Not Eat These Things Before Sleeping: இரவில் நிம்மதியான உறக்கம் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது, ஆனால் சில உணவுப் பழக்கங்களால் தூக்கமின்மை பிரச்சனை தொடங்குகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 13, 2022, 12:12 PM IST
  • இரவில் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
  • நிம்மதியான தூக்கம் வரும்
  • 7 மணி நேரம் தூங்க வேண்டும்
தூங்கும் முன் மறந்து கூட இந்த 3 பொருட்களை சாப்பிடாதீர்கள் title=

தூக்கமின்மை காரணமாக, ஒரு நபர் பல ஆபத்தான நோய்களுக்கு பலியாகலாம். உங்களுக்கும் போதுமான தூக்கம் வராமல் இருந்தால், உங்கள் உணமுறையில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் உணவும் பானமும் உங்கள் தூக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது.

நல்ல ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம்
நல்ல ஆரோக்கியம் தூக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையது. தூக்கமின்மை காரணமாக, பல ஆபத்தான நோய்களுக்கு பலியாகலாம். இதய நோய், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, மார்பக புற்றுநோய் ஆபத்து, மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் இதில் அடங்கும். எனவே, தூங்கும் முன் ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன

இரவில் தூங்கும் முன் இவற்றை உட்கொள்ள வேண்டாம்

1. காஃபின் கலந்த பானங்கள்
இரவில் உணவு உண்ணும் போது வெங்காயம் அல்லது தக்காளி போன்றவற்றுடன் ஆல்கஹால் மற்றும் காஃபின் அளவைக் கண்காணிப்பது முக்கியம். தூக்க முறைகளை பாதிக்கும் காஃபின் பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படுகிறது. காஃபின் தேநீர், காபி மற்றும் பல்வேறு குளிர்பானங்களில் காணப்படுகிறது. எனவே, இரவில் தூங்கும் முன் இவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும்.

2. தக்காளி
தூங்கும் முன் தக்காளி சாப்பிடுவதும் தூக்கத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் தக்காளி அமில வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கும். ஒரு அறிக்கையின்படி, இரவில் தக்காளியை உட்கொள்வது அமைதியின்மையை அதிகரிக்கும், இது நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் என்று கூறப்படுகிறது.

3. வெங்காயம்
வெங்காயம் உங்கள் செரிமான அமைப்பை சீர்குலைக்கும். வெங்காயம் வயிற்றில் வாயுவை உருவாக்கும். இந்த வாயு உங்கள் வயிற்றின் அழுத்தத்தை பாதிக்கிறது, இதன் காரணமாக அமிலம் தொண்டையை நோக்கி நகரும். குறிப்பாக நேராக படுக்கும்போது. ஆச்சரியப்படும் விதமாக, பச்சையாகவோ அல்லது சமைத்த வெங்காயமோ இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இரவில் தூங்கும் முன், முடிந்தவரை வெங்காயத்தை உட்கொள்வதை தவிர்க்கவும்.

எத்தனை மணிநேர தூக்கம் அவசியம்?
தூக்கம் முழுமையடையவில்லை என்றால், அது மூளையின் செயல்பாட்டிலும் உடலிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு எடை கட்டுப்பாடு இருக்காது மற்றும் அவர்கள் சாதாரண மக்களை விட விரைவாக உடல் பருமனாக மாறுகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.  ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News