பாதாம் பருப்பை உட்கொள்ளும் முறை: பாதாம் பருப்பு பலருக்கும் பிடித்தமான உலர் பழங்களில் ஒன்றாகும். பாதாமில் பல வித நன்மைகள் உள்ளன. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றது. பாதாமின் நுகர்வு மனித மூளைக்கு ஒரு சஞ்சீவியாக பார்க்கப்படுகின்றது. பாதாம் மரம் பொதுவாக மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஆசியாவில் ஈரான், ஈராக், மக்கா, ஷிராஸ் போன்ற இடங்களில் பாதாம் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. பாதாமை சரியான முறையில் உட்கொண்டால், உங்கள் மூளையின் நியூரான்களை செயல்படுத்துவது எளிது. எனினும், சரியான முறையில் பாதாமை உட்கொள்ள வேண்டும். பாதாம் பருப்பை முறையாக உட்கொள்வது பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாதாமை தோலுடன் சாப்பிட வேண்டாம்: காரணம் இவைதான்:
- டானின் உப்பு கலவை பாதாமில் உள்ளது. இதனை உட்கொள்வதால் பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்காது. அதனால் பாதாமை தோலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
- பெரும்பாலும் பலர் அவசரம் காரணமாக உலர் பாதாம் பருப்பை அப்படியே உட்கொள்ளத் தொடங்குகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் பிட்டாவின் சமநிலையின்மை உடலில் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே, தோலுடன் பாதாமை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
மேலும் படிக்க | பால் குடித்தால் உடல் எடை குறையுமா, கூடுமா? தெரிந்துகொள்ளுங்கள்!
- தோலுடன் பாதாம் சாப்பிடுவதால், அதன் சில துகள்கள் உங்கள் குடலில் சிக்கிக்கொள்ளும். இதன் காரணமாக வயிற்று வலி, எரிப்பு, வாயு உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பாதாமை தோல் நீக்கி சாப்பிடுபது நல்லது.
பாதாம் பருப்பை எப்படி சாப்பிடுவது?
பல வித உணவு பண்டங்களின் தயாரிப்பில் பாதாம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தினமும் பாதாமை உட்கொள்பவர்கள், பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது நன்மை பயக்கும்? இதற்கு பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- காலையில் தோலை எடுத்து பின்னர் சாப்பிடுங்கள். இது பாதாமின் சூட்டை குறைக்கிறது.
- பாதாம் பருப்பை காலையில் அரைத்து பாலில் சேர்த்து சாப்பிடலாம்.
- மேலும் இதனை வறுத்து மாலையில் சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். உணவியல் நிபுணர்கள் ஒரு நாளைக்கு 5-8 பாதாம் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மனச்சோர்வை நீக்கும் 'மேஜிக் காளான்' ; ஆய்வில் வெளியான ஆச்சர்யத் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ