இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த நோயின் போது, நோயாளிகள் நிறைய சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும. அத்துடன் உங்கள் வாழ்க்கை முறையிலும், உணவுப் பழக்கத்திலும் மாற்றங்களைச் செய்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
இரத்த சர்க்கரை அளவை பூண்டு கட்டுப்படுத்தும்
தினமும் உணவில் பூண்டை சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோய் போன்ற தீவிர நோய்களுக்கு நிவாரணம் தருவது, உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, நம் உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்து ஆகும். இதில் எத்தனை சத்துக்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்..!!
1 அவுன்ஸ் (28.34 கிராம்) பூண்டில் எத்தனை சத்துக்கள் காணப்படுகின்றன
மாங்கனீஸ் - 23% ஆர்.டி.ஏ
வைட்டமின் பி6 - ஆர்.டி.ஏ இல் 17%
வைட்டமின் சி - 15% ஆர்.டி.ஏ
செலினியம் - 6% ஆர்.டி.ஏ
புரதம் - 1.8 கிராம்
நார்ச்சத்து - 1 கிராம்
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக பூண்டு சாப்பிட வேண்டும்
இந்த நிலையில் பூண்டில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் சர்க்கரையை நிர்வகிக்க வேலை செய்கின்றன, இது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மோசமாக்காமல் பாதுகாக்கும்.
பூண்டை எப்படி சாப்பிடுவது?
காலையில் எழுந்தவுடன் 2-4 பூண்டு பற்களை மென்று சாப்பிட்டு வர, நீரிழிவு நோயாளிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். இது தவிர, அன்றாட வாழ்க்கையின் சாதாரண உணவான பருப்பு, காய்கறிகள் போன்றவற்றிலும் பூண்டைச் சேர்க்கலாம். இருப்பினும், பூண்டு இயற்கையில் சூடாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே அதை அதிகமாக சாப்பிட வேண்டாம்.
பூண்டின் பொதுவான நன்மைகள்
* அரோக்கியமான பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த பூண்டு நல்லது. பூண்டு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. அதன் காரணமாக விறைப்புத்தன்மை பிரச்சனை ஓரளவு சரி செய்யப்படுகிறது என்பது பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.
* பூண்டு சளிக்கு சக்தி வாய்ந்த மருந்தாக பயன்படுகிறது. 12 வார காலம் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், பூண்டு சளி மற்றும் காய்ச்சலை 63 சதவீதம் குறைக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
* உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். உயர் இரத்த அழுத்த பிரச்சனையை பூண்டு சரி செய்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
* கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பூண்டு சிறப்பாக செயல்படுகிறது.
* பூண்டு சோர்வைக் குறைத்து ஸ்டாமினாவை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)
மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR