வாய் துர்நாற்றம் நீரிழிவு நோயின் அறிகுறியா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Mouth Odour: பெரும்பாலான மக்களுக்கு, தங்களுக்கு இந்த நோய் இருப்பது விரைவில் தெரிவதில்லை. இதனால் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2022, 02:22 PM IST
  • வாய் துர்நாற்றத்தை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
  • இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
  • இன்றே வாய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றம் நீரிழிவு நோயின் அறிகுறியா? மருத்துவர்கள் கூறுவது என்ன? title=

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் மிக அதிகமாக உள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த, மக்கள் பல்வேறு வகையான உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். 

நீரிழிவு நோய் உண்மையில் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது. தவறான உணவுப் பழக்கத்தாலே பெரும்பாலும் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. பெரும்பாலான மக்களுக்கு, தங்களுக்கு இந்த நோய் இருப்பது விரைவில் தெரிவதில்லை. இதனால் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கின்றன. 

நீரிழிவு நோயாளியின் வாயில் எப்போது துர்நாற்றம் ஏற்படும்? 

மயோ கிளினிக்கின் கூற்றுப்படி, உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், உங்கள் வாயைச் சுற்றி சில அறிகுறிகளை நீங்கள் காணலாம். குருகிராமில் உள்ள ஆர்டெமிஸ் மருத்துவமனையின் தலைமை எண்டோகிரைனாலஜிஸ்ட் டாக்டர் தீரஜ் கபூர், ‘நீரிழிவு என்பது உடலின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு சிஸ்டமிக் நோயாகும். பெரும்பாலான அறிகுறிகள் வாய் வழியாக கண்டறியப்படுகின்றன. 

மேலும் படிக்க | வெள்ளை முடியை வெட்டினாலோ அல்லது பிடுங்கினாலோ அவ்வளவுதான் 

நீரிழிவு நோயில் சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகள் பற்றி பேசப்படுகின்றன, ஆனால் இந்த நோய் வாயுடன் தொடர்புடையது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவுப்பழக்கத்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருந்தாலும், திடீரென ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், பல் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் அவசியம் என்று நம்பப்படுகிறது.’ என்று கூறினார்.

வாய் பரிசோதனை தேவை

வாய் துர்நாற்றம் ஏற்பட்டால், மவுத் டெஸ்ட் அதாவது வாய் பரிசோதனை செய்வது அவசியமாகும். இதை நாம் ஹலிடோசிஸ் என்று அழைக்கிறோம். 'சர்க்கரை அளவு அதிகமாக இருந்து, வாய் துர்நாற்றம், பற்களில் சொத்தை, பற்களில் தொற்று போன்றவை கண்டறியப்பட்டால், அந்த நபர் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப் பெற்று பல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.'

எப்போது சோதனை செய்ய வேண்டும்?

‘டயபெடிக் கேடோய்சிடோசிஸ் என்பது நீரிழிவு நோயின் ஒரு அவசர நிலையாகும். இதற்கு கீட்டோன் காரணி ஆகிறது. இது நீரிழிவு நோயாளிகளிடம் பொதுவாகக் காணப்படும் ஒரு துர்நாற்றமாகும். சர்க்கரை அளவு 250/300 க்கு மேல் உள்ள நோயாளிகளில், நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் மூலம் சங்கேதங்கள் கிடைக்கக்கூடும். கீட்டோன்கள் உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்க, நோயாளி சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் மற்றும் ஹலிடோசிஸ் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு கவலையளிக்கும் நிலைமைகள் ஆகும்.’ என்று டாக்டர் கபூர் கூறுகிறார். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிட்டுவிட்டீர்களா? கவலைய விடுங்க பாஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News