வைட்டமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது என்பதோடு, தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த வைட்டமின் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்றாலும், அதை கண்மூடித்தனமாக உட்கொள்ள வேண்டாம். ஏனெனில், அதிகப்படியான வைட்டமின்-சி உடலுக்கு ஆபத்தானது. இது சிறுநீரகம் மற்றும் எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிகப்படியான வைட்டமின்-சி உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்
வைட்டமின்-சி அதிகமாக எடுத்துக் கொள்வதால் உடலில் சில பக்கவிளைவுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. பின்வரும் அறிகுறிகள் உங்கள் உடலில் தோன்ற ஆரம்பித்தால், வைட்டமின்-சி நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகளில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பது நல்லது.
1. சிறுநீரக கல் பிரச்சனை
அதிகப்படியான வைட்டமின்-சி உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் உடலில் சேரும் கூடுதல் வைட்டமின்-சியை ஆக்சலேட் வடிவில் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. ஆனால், சில சமயங்களில் மற்ற தாதுக்களுடன் கலந்து சிறு படிகங்களாக மாறி சிறுநீரகக் கல்லாக மாறுகிறது.
2. எலும்புகளின் அசாதாரண வளர்ச்சி
உடலில் அதிகப்படியான வைட்டமின்-சி அளவுகள் அசாதாரண எலும்பு வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சியை ஏற்படுத்தும். பெரும்பாலும் மூட்டுகளில் அசாதாரணமாக வளரும் எலும்புகள் காரணமாக வலி, பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க
3. செரிமான பிரச்சனைகள்
வைட்டமின்-சி அதிகமாக உட்கொள்வதன் பொதுவான அறிகுறி மோசமான செரிமானம் ஆகும். இதன் காரணமாக, அஜீரணம், வாந்தி, வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். இருப்பினும், வைட்டமின்-சி சப்ளிமெண்ட்டை நிறுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
4. உடலில் சமநிலையற்ற ஊட்டச்சத்து
வைட்டமின்-சியை அதிக அளவில் உட்கொள்வது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் தாமிரத்தின் அளவைக் குறைக்கலாம். அதே நேரத்தில், வைட்டமின்-சி காரணமாக, உடலில் இரும்புச் சத்து அதிகமாகிறது. இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
உடல் தானாகவே வைட்டமின் சி உற்பத்தி செய்ய முடியாது. எனவே, இந்த ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்க, வைட்டமின்-சி உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டும். பொதுவாக, விட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்பதால் வைட்டமின்-சி அளவுக்கு அதிகமாக ஆகாது. மித மிஞ்சிய அளவிற்கு விட்டமின் சி அதிகரிப்பதற்கு, சப்ளிமெண்ட்ஸ் மாத்திரைகள் சிரப்புகள் தான் முக்கிய காரணம். எனவே, மருத்துவரை அணுகி, உங்களுக்கு எந்த அளவிற்கு விட்டமின் தேவை என்பதை அறிந்து கொள்ளவும்.
அதே நேரத்தில், புகைபிடிப்பவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இயல்பை விட அதிக வைட்டமின்-சி தேவைப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR