புதுடெல்லி: COVID-19 வழக்குகள் குறைவதாகவேத் தெரியவில்லை. 41,100 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்னிக்கை 88 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் வழக்குகள் 88,14,579 ஆக உயர்ந்துவிட்டது. அதில் 4,79,216 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. 82,05,728 குணமடைந்துவிட்டனர்.
447 பேர் கொரோனாவுக்கு பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,635 ஆக உயர்ந்துவிட்டது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஐந்து லட்சத்திற்கும் குறைவாகவே இருந்தது.
தேசிய அளவில் குணமடையும் விகிதம் 93.09 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உள்ளது.
மகாராஷ்டிராவில் 105, டெல்லியில் 96, மேற்கு வங்காளத்தில் 53, உத்தரபிரதேசத்தில் 27, கேரளாவில் 26 பேர் கொரோனாவுக்கு பலியானதால் இறப்பு எண்ணிக்கை 447 ஆக பதிவாகியுள்ளது.
கோவிட் நோய் பாதிப்பினால் நாட்டில் இதுவரை 1,29,635 இறப்புகள் பதிவாகியுள்ளன, மகாராஷ்டிரா 45,914 என்ற இறப்பு எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்லது. கர்நாடகா (11,508), தமிழ்நாடு (11,466), மேற்கு வங்கம் (7,610), டெல்லி (7,519), உத்தரபிரதேசம் (7,354), ஆந்திரா (6,854), பஞ்சாப் (4,428), குஜராத் (3,797).
நவம்பர் 14 ஆம் தேதி வரை மொத்தம் 12,48,36,819 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,20,41,515 ஆகும். அதில் 3,38,70,032 பேர் குணமடைந்துவிட்டனர். உலக அளவில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,82,184 ஆகும்.
இத்தாலியில் நேபிள்ஸ் (Naples) மற்றும் புளோரன்ஸ் (Florence) உள்ளிட்ட பிராந்தியங்களில் அத்தியாவசியமற்ற கடைகளை ஞாயிற்றுக்கிழமை முதல் மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு பிற மாகாணங்களுடன எல்லைகளை மீண்டும் திறக்கிறது மேற்கு ஆஸ்திரேலியா
போலந்தில் COVID-19 பலி எண்ணிக்கை வெள்ளிக்கிழமையன்று 10,000 ஐ தாண்டியது.
Read Also | குழந்தைகளுக்கு COVID-19 ஏன் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை ஏன்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR