July 12 : உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் உலக அளவிலான கொரோனா பாதிப்பு அண்மை தகவல்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 12, 2020, 06:08 AM IST
  • உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,07,849.
  • இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு
  • தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 1,34,226
July 12 : உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்  title=

புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,07,849. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,60,460 என்றும், உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,890,914.

இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,20,916 ஆகவும், அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,15,386 ஆகவும், பலி எண்ணிக்கை 22,123 ஆகவும் உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில் நேற்று 3,965 பேருக்கு புதிதாக கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது, 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆகவும், பலி எண்ணிக்கை 1,898 ஆகவும் அதிகரித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் உலகளவில் COVID-19 நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பது "மிகவும் சாத்தியமில்லாதது" என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது

புளோரிடா மாகாணத்தில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்த நிலையிலும் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட் மீண்டும் திறக்கப்படுகிறது.  முழுமையாக திறக்கப்படவில்லை என்றாலும், பகுதியளவு மட்டுமே திறக்கப்படுகிறது.

COVID-19 பெருந்தொற்று காரணமாக அனைத்து மாநிலப் பல்கலைக்கழகத் தேர்வுகளையும் டெல்லி அரசாங்கம் ரத்து செய்துவிட்டது.

Read Also | தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா தொற்று; 3591 பேர் குணம்; மரணம் - 69

கோஸ்ட்டா ரிக்காவில் COVID-19 நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க சான் ஹொசே மாகாணத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:

1. அமெரிக்கா - 31,84,573

2. பிரேசில் - 18,00,827

3. இந்தியா - 8,20,916

4. ரஷ்யா - 7,12,863

5. பெரு - 3,19,646          

6. சிலி - 3,09,274

7. இங்கிலாந்து - 2,89,678

8. மெக்சிகோ - 2,89,174

9. ஸ்பெயின் - 2,53,908

10. இரான் - 2,52,720

Trending News