புதுடெல்லி: பல மாதங்களாக கொரோனா தொற்று நோய் உலகெங்கிலும் உள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நோய் துவங்கியபோது ஆடிப்போன மனித இனம், மெதுவாக அதிலிருந்து மீண்டு, இந்த தொற்றை தோற்கடிப்பதற்கான வழியைத் தேடத் துவங்கியது.
உலகெங்கிலும் உள்ள பலரின் முயற்சியால், பல தடுப்பு மருந்துகள் கடைசி கட்ட பரிசோதனைகளை நெருங்கி விட்டன. தடுப்பு மருந்து உருவான பின்னர், அதை முறையாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது ஒரு மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.
இந்தியா (India) போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், இது ஒரு சிக்கலான விஷயம் என்பதை சொல்ல வெண்டியதில்லை. நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த தடுப்பு மருந்து கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசும் மாநில அரசுகளும் மிகவும் கவனமாக இருக்கின்றன. பல பரிசோதனைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், தடுப்பு மருந்து விநியோகத்திற்கான செயல்முறை குறித்த திட்டமிடல் கடந்த பல நாட்களாகவே நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பு மருந்து (Corona Vaccine), தேவைப்படும் அனைவரையும் சரியான நேரத்தில் சென்றடையச் செய்வதற்கான ஒரு வழித்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், புதன்கிழமை, அரசாங்கம் ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. இதன் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி மட்டத்தில் ஒரு தொகுதி பணிக்குழுவை அரசாங்கம் அமைக்கும். இதனால் தடுப்பு மருந்தை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்வது எளிதாக இருக்கும்.
இந்தத் திட்டத்திற்கு களமிறங்குவதற்காக, சுகாதார அமைச்சகம் (Health Ministry) அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதார செயலாளர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, விரைவில் தடுப்பு மருந்துக்கான பணிக்குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பணிக்குழுவின் உதவியுடன், கொரோனா தடுப்பு மருந்து நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்களைத் தவிர உள்ளூர் மக்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பும் இதில் இருக்கும்.
ALSO READ:Corona Side Effect: 40% நோயாளிகளுக்கு காதுகளில் buzzing ஒலி: UK ஆய்வு
ஒவ்வொரு பணிக்குழுவும் SDM அல்லது தாசில்தார் தலைமையில் செயல்படும். இந்த பணிக்குழுவில் எஸ்.டி.எம் தவிர, தாசில்தார், உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், அப்பகுதியின் செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரும் சேர்க்கப்படுவார்கள். மாநில முதலமைச்சர்களுடனான சந்திப்பில், தடுப்பு மருந்து அளிக்கும் செயல்முறையை வடிவமைத்து சீராக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். .
இருப்பினும், இப்போது மத்திய அரசு (Central Government) சார்பாக, கொரோனா தடுப்பு மருந்து வருவதற்கு முன்பு பணிக்குழுவை முழுமையாக தயார் செய்யுமாறு சுகாதார அமைச்சகம் உத்தியோகபூர்வ முறையில் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
ALSO READ: Shocking: Corona Virus-ஐ விட ஆபத்தான கொரோனாவின் பின் விளைவுகளைப் பற்றி தெரியுமா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR