இந்தியா கொரோனா தொற்றின் ஆபத்தான இரண்டாவது அலையில்(Corona Virus Second Wave) சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கின்றது. மத்திய, மாநில அரசுகள், நெருக்கடி நிலையை சமாளிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என கூறி வந்த நிலையில், தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்களை மேற்கொண்டு, சரி வர திட்டமிட்டு அவற்றை அமல்படுத்தினால் இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம் என மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த புதன் கிழமையன்று, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகத்தை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என்பது போல் தோன்றுகிறது என்று கூறியிருந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் (India) 4.14 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Corona Virus) பாதிக்கப்பட்டுள்ளனர். 3,915 பேர் இறந்தனர் என பதிப்வாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 7, 2021) தெரிவித்துள்ளது.
இதுவரை, இந்தியாவில் மொத்தமாக 2,14,91,598 பேர் கொரோனா தொற்றால் (Corona Virus) பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,76,12,351 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2,34,083 பேர் இறந்துள்ளனர். தற்போது நாட்டில் 36,45,164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ALSO READ | Pfizer தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த நிலையில், மத்திய அரசின அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவனின் இன்றைய கருத்து சிறிது நிம்மதி தருவதாக அமைந்துள்ளது எனலாம்.
கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, தினசரி தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 4,00,000 என்ற அளவை கடந்து வருகிறது.
ALSO READ | CoWIN போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சம் அறிமுகம்; விபரம் உள்ளே
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR