Contraceptive pill for men: ஆண்களுக்கு 99 சதவிகிதம் பயனளிக்கும் கருத்தடை மாத்திரைகள்

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கர்ப்பத்தைத் தடுப்பதில் 99% பயனுள்ளதாக இருக்கும் என்றும், இது ஹார்மோன் அல்லாத மாத்திரை என்பதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 24, 2022, 11:56 AM IST
  • ஆண்களும் கருத்தடை மாத்திரையை பயன்படுத்தலாம்!
  • 99% பலனளிக்கும் கருத்தடை மாத்திரை
  • ஹார்மோன் அல்லாத கருத்தடை மாத்திரைகள்
Contraceptive pill for men: ஆண்களுக்கு 99 சதவிகிதம் பயனளிக்கும்  கருத்தடை மாத்திரைகள் title=

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கர்ப்பத்தைத் தடுப்பதில் 99% பயனுள்ளதாக இருக்கும் என்றும், இது ஹார்மோன் அல்லாத மாத்திரை என்பதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி...

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் கருத்தடை மாத்திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், கருத்தடை மாத்திரை என்றால் அது பெண்களுக்கானது என்ற நிலையே இருந்து வருகிறது.

அறிவியல் ஆராய்ச்சிகளின் முன்னேற்றங்கள் பல தலைகீழ் மாறுதல்களை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது, ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரை முற்றிலும் பாதுகாப்பானது, 99% வரை பலனளிக்கக்கூடியது என்று தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | கோவேக்சின் தடுப்பூசிக்கு பிறகு பாராசிட்டமால் மாத்திரை தேவையில்லை!!

இந்த புதிய கருத்தடை மாத்திரையை பயன்படுத்தும் ஆண்களுக்கு பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது. ஏனென்றால், இந்த மாத்திரைகள் ஹார்மோன் அல்லாத கருத்தடை மாத்திரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த மத்திரைகளை பயன்படுத்தும் ஆண்கள் உடலுறவில் ஈடுபடும்போது வெளிப்படும் விந்துக்களால் கர்ப்பம் ஏற்படாது.

கர்ப்பத்தைத் தடுப்பதில் 99 சதவிகிதம் பயனுள்ளதாக இந்த புதிய கருத்தடை மாத்திரைகளை இருப்பதாக பரிசோதனைகள் கூறுகின்றன.  

மேலும் படிக்க | கொரோனா உபயத்தால் உச்சத்தை எட்டிய டோலோ 650 மாத்திரை விற்பனை

கருத்தடை சாதனங்களில், ஆண்களுக்கானவை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாலும், பெண்கள் சுமக்கும் கருத்தடைச் சுமையை சமப்படுத்த இந்த மாத்திரை திருப்புமுனையாக இருக்கும்.  

தற்போது, மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளும் கட்டத்தில் இந்த கருத்தடை மாத்திரைகளின் சோதனைகள் உள்ளன.

ஆனால் இந்த மாத்திரையில் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என்றறும், அது இந்த கருத்தடை மாத்திரை மருந்து சந்தைக்கு வருவதைத் தடுக்கலாம் என்று  சில நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகள் வாங்க மக்கள் அலைமோதுவது ஏன்

மினியாபோலிஸில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தின் எம்.டி அப்துல்லா அல் நோமனின் கூற்றுப்படி, "பல முயற்சிகள் இருந்தபோதிலும், எந்தவொரு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான ஆண் கருத்தடை மாத்திரைகள், மனித மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெறவில்லை.

அவற்றில் பெரும்பாலானவை ஹார்மோன்களை அடிப்படையாகக் கொண்டவை, ஆனால் ஹார்மோன் அல்லாத கருத்தடை மாத்திரைகள் எதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை."

நான்கு வாரங்கள் தொடர்ந்து ஆண் எலிகளுக்கு YCT529 என்ற வேதிப்பொருளின் தினசரி டோஸ் கொடுத்த விஞ்ஞானிகள், அவற்றின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்ததைக் கண்டறிந்தனர். மருந்து நிறுத்தப்பட்ட நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் எலிகளால் மீண்டும் சரியாக இனப்பெருக்கம் செய்ய முடிந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜூஸ் உடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா?

மருத்துவ பரிசோதனைகளில் பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் டெஸ்டோஸ்டிரோன், ஆண் பாலின ஹார்மோன், எடை அதிகரிப்பு, மனச்சோர்வு மற்றும் பிற எதிர்மறை விளைவுகள் கொண்டவையாக இருக்கின்றன.  

"கருவுறுவதை கட்டுப்படுத்தும் மாத்திரைகளுக்கு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் மக்கள் நோய்க்காக அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கருத்தடை மாத்திரிகளின் பக்க விளைவுகளை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று நோமன் கூறுகிறார்.

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்து கருவுறும் தன்மையை குறைக்கும் இந்த கருத்தடை மாத்திரை தொடர்பான மனிதர்கள் மீதான மருத்துவ ஆய்வுகள் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பாக் ஜலசந்தியை கடந்து சாதித்த 13 வயது மாற்றுத் திறனாளி சிறுமியின் சாதனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News