Benefits of Coffee in Liver Diseases: நம்மில் பலர் காபி அல்லது டீ உடன்தான் நாளை தொடங்குகிறோம். அதுவும் காபி பிரியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். காபி, டீ என இரண்டிலுமே நல்ல பலன்களும் உள்ளன, தீய விளைவுகளும் உள்ளன. காபியின் ஒரு முக்கியமான நன்மை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காபியில் பல அரோக்கிய நன்மைகள் உள்ளன. எனினும், இதை அளவுடன் குடிக்க வேண்டும். காபி குடிப்பதால் நமது கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. காலையில் காபி குடித்தால், கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் காபி குடிப்பதால் பல கல்லீரல் நோய்கள் குணமாகின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிளாக் காபி
சரியான அளவில் பிலாக் காபியை குடிப்பது நல்லது என்றும், அது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாகவும் பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக கல்லீரல் பிரச்சனைகளைக் குறைக்க காபி உதவுகிறது. காபி குடிப்பதால் கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் ஈரல் அழற்சி போன்ற பிரச்சனைகளை குறைக்கலாம். ஆகையால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, தினசரி டயட்டில் காபியை ஒரு அங்கமாக்கிக்கொள்வது நல்லது.
நான்-ஆல்கஹாலிக் ஃபேடி லீவர் பிரச்சனையில் நிவாரணம்
காபி குடிப்பது நான்-ஆல்கஹாலிக் ஃபேடி லீவர் பிரச்சனையில் நிவாரணம் பெற உதவுவதாக பல ஆய்வூகள் மூலம் தெரியவந்துள்ளது. காபி குடிப்பதால் இதய நோய்கள் (Heart Diseases), நரம்பியல் (Neurological) மற்றும் நீரிழிவு (Diabetes) போன்ற பிரச்சனைகள் பெருமளவு குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நாம் காபி குடிக்கும் அளவும் மிக முக்கியம். தினமும் எவ்வளவு காபி குடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம்?
பிளாக் காபி கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுவதாக சுகாதார நிபுணர்களின் கூறுகிறார்கள். அந்த வகையில், ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் காபி குடிக்கலாம். இருப்பினும், இது காபி குடிப்பவரின் உடல்நலம் மற்றும் பல்வேறு உடல் நிலைமைகளைப் பொறுத்தது. இவற்றை சார்ந்து காபி அளவு மாறுபடலாம்.
மேலும் படிக்க | சோர்வு, அதிக தாகம், அதிக பசி... சுகர் லெவல் எகிறும் அறிகுறிகள் இவை: ஜாக்கிரதை!!
கல்லீரலுக்கு காபி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது?
- காபி உட்கொள்வது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவர்களும் நம்புகிறார்கள்.
- தினமும் 2 கப் காபி குடித்து வந்தால், பல கல்லீரல் நோய்களை பெருமளவு குறைக்கலாம்.
- பிளாக் காபி, கல்லீரல் ஈரல் அழற்சி மற்றும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
- பிளாக் காபி குடிப்பதால் நாள்பட்ட கல்லீரல் நோய் அபாயம் 71 சதவீதம் வரை குறைவதாக கூறப்படுகின்றது.
- கல்லீரல் பாதுகாப்பில் காபி வெகுவாக உதவுவதாக பல ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
காபி குடிப்பதால் கிடைக்கும் பிற நன்மைகள் என்ன?
- காபி குடித்தால், டென்ஷன் மூலம் ஏற்படும் தலைவலியில் நிவாரணம் கிடைக்கின்றது.
- காபி நம் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றது.
- காபி குடிப்பதன் மூலம் மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கலாம்.
- காபி நமது மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகின்றது.
- இரத்த சர்க்கரை நோயாளியாக இருந்தால், காபி குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
- காபி டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
- எனினும், இதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )
மேலும் படிக்க | இந்த பாகங்களில் வலியா? இது கொலஸ்ட்ராலின் அபாய அறிகுறியாக இருக்கலாம்... ஜாக்கிரதை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ