கொரோனா தொற்று பாதிப்பு இது வரை இல்லாத அளவு அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள், தடுப்பூசி போடும் நடவடிக்கையை எடுப்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்ந்நிலையில், கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை கள்ள சந்தையில் விற்பனை செய்வதில் ஈடுபட்டதாக மூன்று நபர்கள், குருகிராமின் உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, அனைத்து மாநிலங்களுக்கும் 6.69 லட்சம் பாட்டில் ரெம்டெசிவா் (Remdesivir ) மருந்து அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு சனிக்கிழமை (ஏப்ரல் 17, 2021) COVID-19 சிகிச்சை மருந்தான ரெம்டெசிவரின் விலையை ஒரு ஊசிக்கு ரூ.2,000 வரை குறைத்தது. இந்தியாவில் ரெம்டெசிவா் (Remdesivir ) மருந்தை உற்பத்தி செய்ய, 7 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அதோடு, ரெம்டெசிவா் மருந்தின் உற்பத்தி அளவு, 28.63 லட்சம் பாட்டில்கள் என்ற அளவில் இருந்து 41 லட்சம் பாட்டில்களாக உயா்ந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவா் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ALSO READ | கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை!
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது அனைவரின் கவலைகளையும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,61,500 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது. 18.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை நிலவர படி உலகில் கொரோனாவால் 14 கோடியே 13 லட்சத்து 16 ஆயிரத்து 012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 23 ஆயிரத்து 911 பேர் பலியாகினர். 11 கோடியே 99 லட்சத்து 23 ஆயிரத்து 164 பேர் மீண்டனர்.
ALSO READ | சில மாநிலங்களில் சரியான திட்டமிடல் இல்லை, 9% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன:மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR