சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? எவ்வளவு குடிக்கலாம்?

சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:51 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் காஃபி குடிக்கலாமா? வேண்டாமா?
  • காஃபி குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? எவ்வளவு குடிக்கலாம்? title=

சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? என்ற கேள்வி சர்க்கரை நோயை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நோயாளியின் மனதிலும் வந்திருக்க வேண்டும். இந்த கேள்வி அவசியமான ஒன்று என்பதால், அதற்கான பதிலை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதிலும் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக்கூடாது? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்ற விஷயங்களை தெரிந்து வைத்திருந்தால், எந்த உணவையும் தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்காது. 

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் ஆபத்து: இவற்றில் கவனம் தேவை

அந்தவகையில் காபி குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். காபி என்பது பொதுவாக உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சில ஆய்வுகளில் காபி குடிப்பதால் சர்க்கரை நோய் எதிர்காலத்தில் வருவதை கூட தவிர்க்கலாம் என கூறுகின்றன. காபியில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சர்க்கரை நோய் வரக்கூடாது என்பதற்காக அதிக காபி குடிக்கலாம் என நினைக்கக்கூடாது. மேற்கூறிய விஷயங்கள் நன்மை என்றால், அதன் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு..!!

ஒரு சில ஆய்வுகளில் காபி குடிப்பதால் இன்சுலின் சுரப்பு குறைவதாகவும் கூறுகின்றன. இதனால் நாளடைவில் டைப் 1 மற்றும் 2 ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக காபி குடிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பிபி ஏற்படும். மேலும், வெறும் வயிற்றில் காபி குடிப்பதும் இதய பிரச்சனைகளை அதிகரிக்கும். குடிக்க வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவுக்குப்பின் காபியை குடியுங்கள். நீரிழிவு நோயாளிகள் காபியை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் கோரிக்கையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News