இந்தியாவிடம் COVID-19 தடுப்பூசி வழங்க வேண்டும் என பல நாடுகள் கோரும் நிலையில் இப்போது கம்போடியாவும் சேர்ந்துள்ளது
இந்தியாவில், இரண்டு மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசிகளுக்கான அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல நாடுகள், இந்தியாவிடம் தடுப்பூசி வழங்குமாறு கோரியுள்ளன. அந்த வகையில் கம்போடியா பிரதமர் ஹுன் சென் இந்தியாவிடம் தடுப்பூசி வழங்குமாறு கோரியுள்ளார்.
இந்தியா முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், சுமர் 3 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளது. கோவிட் -19 தடுப்பூசிகளை வெற்றிகரமாக உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியதற்காக கம்போடியா பிரதமர் இந்தியாவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) சனிக்கிழமையன்று உலகின் மிகப்பெரிய கோவிட் தடுப்பூசி போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார், மேலும் இந்தியாவின் தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவ மையங்களில் வழங்கப்படுகின்றன.
முன்னதாக, கம்போடியாவிற்கு ஒரு மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்க சீனா முன்வந்ததாகவும், அவசரநிலை காரணமாக சீனாவின் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல் கிடைக்காத போதிலும் இந்த வாய்ப்பை ஏற்க முடிவு செய்துள்ளதாகவும் ஹன் சென் அறிவித்ததாக தி புனோம் பென் போஸ்ட் தெரிவித்துள்ளது .
இந்தியாவிடம் உதவி கோரும் பிற நாடுகள்
தற்போது இந்தியாவில் (India) இருந்து தடுப்பூசி கோரும் நாடுகளில் நேபாளம், பூட்டான், மாலத்தீவு, மியான்மர், பங்களாதேஷ், பிரேசில், இலங்கை, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம், மொராக்கோ, சவுதி அரேபியா மற்றும் மங்கோலியா ஆகியவை அடங்கும்.
COVID -19 தடுப்பூசியை உடனடியாக வழங்குமாறு இந்திய அரசிடம் பல நாடுகள் கோருகின்றன. இந்தியா தனது அண்டை நாடுகளில் எவருக்கும் உதவி வழங்க மறுக்கவில்லை, மாறாக அதன் அண்டை நாடுகளான பூட்டான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள், மொரீஷியஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு குறைந்தது ஒரு கோடி டோஸ் தடுப்பூசி கொடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
ALSO READ | பாகிஸ்தான் சிந்தில் சுதந்திர பேரணியில் இடம் பெற்ற பிரதமர் மோடியின் போஸ்டர்கள்..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR