மனித உடலில் அனைத்து உறுப்புகளும் அவசியம் எனினும் என்றாலும், மூளை என்பது மிக முக்கியமான விஷயம். ஏனெனில் இதன் மூலம் பெறும் கட்டளையை ஏற்று தான் மற்ற உறுப்புகள் வேலை செய்கின்றன. நமது நடவடிக்கை, நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் என எல்லாவற்றையும் முறைப்படுத்துவது மூளை தான்.
மூளையின் நரம்புகள் உடலின் அனைத்து பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள சிறிய பிரச்சனை கூட, உடலின் செயல்பாட்டை முழுமையாக பாதிக்கும். நரம்புகளின் பலவீனத்திற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே மூளையின் நரம்புகளில் ஏன் பலவீனம் ஏற்படுகிறது என்பதையும், அதை ஆரோக்கியமாக (Brain Health) வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வோம்.
மூளையில் பலவீனம் ஏற்பட காரணம்
மூளையில் ஏற்படும் காயங்கள், உடலில் சில ஊட்டச்சத்துக்களின் குறைப்பாடு, நரம்புகளில் அழுத்தம் ஆகியவை மூளையில் வலியை ஏற்படுத்துகின்றன. இதனுடன் சில சமயங்களில் தொற்று மற்றும் சில மருந்துகளாலும் மூளை நரம்புகளில் பலவீனம் ஏற்படும். இது தவிர, சில சமயங்களில் மற்ற காரணங்களாலும் மூளை நரம்புகளில் பலவீனம் ஏற்படும்.
ALSO READ | Brain Health: மூளையை டேமேஜ் செய்யும் ‘4’ ஆபத்தான பழக்கங்கள்..!!
மூளையின் நரம்புகளில் பலவீனம் காரணமாக, ஆக்ஸிஜன் அனைத்து செல்களையும் சரியாகச் சென்றடையாது. இதனுடன், சில சமயங்களில் மூளையின் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் நரம்புகளில் ரத்தம் சேர்வதால், திடீரென கடுமையான தலைவலியும் வரலாம். அதேபோல், உங்கள் உடலில் கூச்ச உணர்வு இருந்தால், இவையும் மூளை நரம்புகள் பலவீனமடைவதற்கான அறிகுறிகளாகும். உங்கள் மூளையின் நரம்புகளில் இரத்தம் சரியாகச் செல்லவில்லை என்றால் உடலின் வெவ்வேறு பகுதிகளில் கூச்ச உணர்வு ஏற்படத் தொடங்கும்.
நரம்புகளின் பலவீனம் மனதின் திறனையும் பாதிக்கிறது
மூளை நரம்புகள் பலவீனமடைவது நமது மனத் திறனையும் பாதிக்கிறது. அதாவது, உங்கள் சிந்திக்கும் திறனை பாதிக்கிறது. இதனால், சில சமயங்களில் நினைவாற்றலையும் பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு விஷயங்களை நினைவில் வைத்து பேசுவதை கடினமாகிறது. இது தவிர, பேசுவதில் குழப்பம் ஏற்பட்டாலும், மூளையின் நரம்புகளின் பலவீனம் காரணமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | Brain Health: இந்த ‘5’ உணவுகள் மூளையை டேமேஜ் செய்யும்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR