கோடைக்காலத்தில் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது இயல்பானது, ஆனால் இந்த வியர்வையால் சிலருக்கு உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுவதால், பொது இடங்களில் தர்மசங்கடத்தை சந்திக்க நேரிடுகிறது. இந்த துர்நாற்றத்தின் மூல காரணம் என்ன, அதை எவ்வாறு அகற்றுவது என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
பொதுவாக சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் வியர்வையுடன் தொடர்பு கொள்ளும்போது, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. வியர்வைக்கும், துர்நாற்றத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்றாலும் அவை பாக்டீரியாவுடன் கலந்து துர்நாற்றத்தை உருவாக்குகிறது. வியர்வை தோலின் மேற்பரப்பில் இருக்கும் இரண்டு வியர்வை சுரப்பிகளில் இருந்து வருகிறது, அதாவது எக்ரைன் மற்றும் அபோக்ரைன். உடல் துர்நாற்றத்திற்கு அபோக்ரைன் காரணம் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்
வியர்வை இயற்கையாகவே உடலில் வரும், ஆனால் சிலவற்றை சாப்பிடுவது உடல் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது, இருப்பினும் உடல் துர்நாற்றத்திற்கான காரணம் மரபணுவாக இருக்கலாம், அதைத் தவிர்க்க தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்.
-பூண்டு
- வெங்காயம்
- ப்ரோக்கோலி
-காலிஃபிளவர்
- முட்டைக்கோஸ்
- மாமிசம்
இவற்றை உட்கொள்வதால் உடலில் துர்நாற்றம் அதிகரிக்கும்
- அதிக அளவில் மசாலா பொருட்கள் எடுத்துக்கொள்வது
- மது
- காஃபின்
வியர்வை நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்க டிப்ஸ்
1. ஆப்பிள் சைடர் வினிகர்: உடல் துர்நாற்றத்தைப் போக்க ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலில் 1 கப் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து சேமித்து வைக்கவும். இந்த ஆப்பிள் சைடர் வினிகர் கலவையை இரவில் சுத்தமான மற்றும் உலர்ந்த அக்குள்களில் தெளித்துவிட்டு தூங்கச் செல்லவும். மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரில் அக்குள்களை கழுவவும்.
2. உருளைக்கிழங்கு: கோடையில் வியர்வையால் ஏற்படும் அக்குள் துர்நாற்றத்தைப் போக்க உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கை தோலுரித்து துண்டுகளாக வெட்டக்கொள்ளவும், இப்போது இந்த துண்டை அக்குளில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.
3. கல் உப்பு: வியர்வை நாற்றத்தை போக்க கல் உப்பை பயன்படுத்தலாம். இதற்கு தான், குளிக்கும் தண்ணீரில் கல் உப்பை முழுவதுமாக கரையும் வரை கலக்க வேண்டும். அதன் பிறகு இந்த தண்ணீரில் குளிக்கவும்.
4. தக்காளி சாறு: தக்காளி சாறு உடல் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது. ஒரு தக்காளியை அரைத்து அதன் சாற்றை எடுத்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து, 10 நிமிடம் அக்குளில் மசாஜ் செய்யவும். அதன் பிறகு அக்குள்களை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மதிய உணவுக்குப் பிறகு இந்த 3 தவறுகளைச் செய்யக்கூடாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR