Diabetic Diet: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது இவ்வளவு ஈஸியா?

Diabetic Diet: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உணவு முறையை மாற்றுவது மிகவும் அவசியம். சில மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2022, 01:31 PM IST
  • ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அஞ்சறைப்பெட்டி
  • நீரிழிவு நோயாளிகள் இந்த மசாலாக்களை பயன்படுத்தலாம்
  • நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கிய டிப்ஸ்
Diabetic Diet: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது இவ்வளவு ஈஸியா? title=

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உணவு முறையை மாற்றுவது மிகவும் அவசியம். சில மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கலாம். சர்க்கரை நோயால் தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகள் கவலைகளை ஏற்படுத்துகின்றன. மருந்து இல்லாமல் இந்த நோயைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், உணவில் சிறு மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த நமது அஞ்சறைப் பெட்டியில் உள்ள சில பொருட்களே நல்ல பலனைத் தருகின்றன.

வெந்தயம்

நீரிழிவு நோய்க்கு வெந்தயம் மிகவும் நன்மை பயக்கும். வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது என்பதோடு, அதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வெந்தய விதைகளை உட்கொள்வதால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். வெந்தயத்தை ஊறவைத்து உட்கொள்வது நன்மை பயக்கும். அதேபோல், வெந்ததயத்தைப் பொடி செய்து வைத்துக் கொண்டு, தினமும் வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

மிளகு

மிளகில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கருமிளகுப் பொடியை மஞ்சளுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த பொடியை முன் சாப்பிடுங்கள். சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

மேலும் படிக்க | Turmeric Alert: சர்வரோக நிவாரணியாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் மஞ்சளும் கெடுதலே

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவங்கப்பட்டை நன்மை பயக்கும். இலவங்கப்பட்டை கஷாயம் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். மஞ்சள் மற்றும் வெந்தயத்துடன் இலவங்கப்பட்டை கலந்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை வெதுவெதுப்பான நீரில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய்க்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உணவு முறை

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம், ஏனென்றால் உணவு உடனடியாக உடலில் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. நீங்கள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ், அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பொருட்களை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Diabetic Diet Fruits: நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News