COVID-19 வெறும் ட்ரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேல் தான்: Bill Gates

உயிரியல் பயங்கரவாதம் குறித்து பேசிய கேட்ஸ்,  கொடிய வைரஸை ஒருவரால் எளிதில் வடிவமைக்க முடியும் என்றும், அத்தகைய வைரஸ்களை எதிர்கொள்வது COVID-19 போன்ற இயற்கையாக ஏற்படும் தொற்றுநோயையும் விட மிகவும் கடினமாக இருக்கும் என்றும் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 7, 2021, 07:45 PM IST
  • 2015 ஆம் ஆண்டில் COVID-19 போன்ற ஒரு தொற்றுநோய் பரவும் என்று கணித்தார் பில் கேட்ஸ்.
  • 2014 இல் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா பரவல் ஏற்பட்டதை அடுத்து பில் கேட்ஸ் இதை கணித்தார்.
  • தொற்று நோயை குறிப்பாக, வேகமாக பரவும் வைரஸ் நோயைக் கையாள்வதற்கு உலகம் தயார் நிலையில் இல்லை என்கிறார் பில் கேட்ஸ்
COVID-19 வெறும் ட்ரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேல் தான்: Bill Gates title=

2015 ஆம் ஆண்டில் COVID-19 பரவலை சரியாக கணித்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates)மீண்டும் உலகம் முழுவதையும் பேரழிவிற்கு உட்படுத்தக்கூடிய இரண்டு பேரழிவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் COVID-19 போன்ற ஒரு தொற்றுநோய் பரவும் என்று கணித்த பில் கேட்ஸ், பிரபலமான யூடியூப் சேனலான “Veritasium”  என்ற சேனலை நடத்தும் டெரெக் முல்லரிடம் பேசுகையில், 'காலநிலை மாற்றம்' மற்றும் 'உயிரியல் பயங்கரவாதம்' ஆகிய இரண்டு பேரழிவுகள் உலகை தாக்கும் என கூறிய அவர் உலகம் இதை எதிர் கொள்ளும் அளவிற்கு தயார் நிலையில் இல்லை என்றார்.

உயிரியல் பயங்கரவாதம் குறித்து பேசிய கேட்ஸ் (Bill Gates),  கொடிய வைரஸை ஒருவரால் எளிதில் வடிவமைக்க முடியும் என்றும், அத்தகைய வைரஸ்களை எதிர்கொள்வது COVID-19 போன்ற இயற்கையாக ஏற்படும் தொற்றுநோயையும் விட மிகவும் கடினமாக இருக்கும் என்றும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இது போன்ற ஒரு பேரழிவு ஏற்பட்டால், தற்போதைய Corona Virus தொற்றுநோயை விட அதிக அளவில் இறப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்

2015 ஆம் ஆண்டில், பில் கேட்ஸ் எதிர்காலத்தில்  ஒரு வைரஸ் தொற்று நோய் மனிதகுலத்தை பெரிதும் பாதிக்கும் என கூறினார். 2014 இல் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா பரவல்   ஏற்பட்டதை அடுத்து பில் கேட்ஸ் இதை கணித்தார்.

"தொற்று நோயை குறிப்பாக, வேகமாக பரவும் வைரஸ் நோயைக் கையாள்வதற்கு உலகம்  தயார் நிலையில் இல்லை" என பில் கேட்ஸ் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

ALSO READ | 'Made in India' கோவிட் -19 தடுப்பூசிக்காக 25 நாடுகள் காத்திருக்கின்றன: S.ஜெய்சங்கர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News