Cauliflower Side Effects: காலிஃபிளவர் சாப்பிட்டா இந்த பிரச்சனை வருமா?

உங்களுக்கும் இந்த பிரச்சனைகள் இருந்தால் காலிஃப்ளவரை சாப்பிட வேண்டாம், இல்லையென்றால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 02:03 PM IST
Cauliflower Side Effects: காலிஃபிளவர் சாப்பிட்டா இந்த பிரச்சனை வருமா?  title=

உங்களுக்கும் இந்த பிரச்சனைகள் இருந்தால் காலிஃப்ளவரை சாப்பிட வேண்டாம் பிரச்சனை இன்னும் அதிகரிக்கும். சிலருக்கு, காலிஃபிளவர் சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும். எந்தெந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த காலிஃபிளவரை சாப்பிடக்கூடாது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

குளிர்காலத்தில் காலிஃபிளவர் அதிகமாக கிடைக்கும். காலிஃபிளவர் மிகவும் சுவையானது, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். காலிஃபிளவரில் போதுமான அளவு புரதம், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் என பலவித சத்துக்கள் உள்ளன.

வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை காலிஃபிளவரில் உள்ளன. ஆனால் சிலருக்கு, காலிஃபிளவர் சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும் (Cauliflower Side Effects).  

செரிமான பிரச்சனைகள்- செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் காலிஃபிளவர் சாப்பிடக்கூடாது. காலிஃபிளவர் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். எனவே, வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களும் காலிஃபளவர் சாப்பிட வேண்டாம்.

READ ALSO | அருகில் நெருங்கினாலே உயிர்பலி கேட்கும் கொலைகார மரம்

காலிஃபிளவரில் ராஃபினோஸ் உள்ளது, இது ஒரு வகை கார்போஹைட்ரேட் ஆகும். சிலரது உடலால் இதை சரியாக செரிமாணம் செய்ய முடியாது. இதனால் அசிடிட்டி பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே, அசிடிடி பிரச்சனை இருந்தாலும், வயிற்றில் பிரச்சினைகள் இருந்தாலும்  காலிஃபிளவரை சாப்பிடவேண்டாம்.

தைராய்டு - தைராய்டு பிரச்சனை இருந்தால் காலிஃபிளவரை சாப்பிடக்கூடாது. இதை சாப்பிடுவதால் உங்கள் T3 மற்றும் T4 ஹார்மோன்கள் அதிகரிக்கும். கற்கள்- உங்களுக்கு சிறுநீரக கல் (Kidney health) இருப்பவர்கள் காலிஃபிளவரை சாப்பிடவே கூடாது. காலிஃபிளவரில் கால்சியம் அதிகம் உள்ளது. அதிகமாக கால்சியம் சாப்பிட்டால் யூரிக் அமிலத்தின் பிரச்சனை அதிகரிக்கும்.

காலிஃபிளவரில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இதை அதிகமாக உட்கொள்வதால், உடலின் இரத்தம் படிப்படியாக கெட்டியாகத் தொடங்குகிறது. எனவே இது தொடர்பான பிரச்சனை இருப்பவர்களும், காலிஃபளவரை தவிர்க்கலாம்.

Also Read | கோவிட் மூன்றாவது அலைக்குக் காரணமாகுமா ஒமிக்ரான்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News