சிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவை

Kidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 20, 2024, 07:03 PM IST
  • வலி நிவாரணிகளை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
  • மதுபானம் அருந்த வேண்டாம்.
  • இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைக்கவும்.
சிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவை title=

Kidney Health: சிறுநீரகம் நமது உடலின் பல முக்கியமான உறுப்புகளில் ஒன்று. பல நேரங்களில், நமது வாழ்க்கைமுறையில் ஏற்படும் சிறு பிரச்சனைகளும் சிறுநீரகங்க செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த பிரச்சனைகளை சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால், சிறுநீரக பாதிப்பும் ஏற்படும். ஆகையால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் மிக அவசியமாகும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது. சிறுநீரக நச்சுப் பொருட்களை சிறுநீர் மூலம் அகற்றுகிறது. உடலை உள்ளே இருந்து சுத்தமாக வைத்திருக்க, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஒருவரது குடும்ப வரலாற்றில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு போன்றவை இருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிறுநீரகத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் உதவிக்குகுறிப்புகள்

வலி நிவாரணிகளை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்

அளவுக்கு அதிகமான மருந்துகள் அல்லது வலி நிவாரணிகளைப் (Painkillers) பயன்படுத்தினால், அது சிறுநீரகம் பாதிக்கபடுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். ஆகையால் எந்த வலி அல்லது நோய்க்காக வலி நிவாரணியை எடுத்துக்கொள்கிறீர்களோ, அந்த நோய் அல்லது வலியை சரி செய்வதற்கான முறையான சிகிச்சையை பெறுவதே சரியான வழியாகும். 

மதுபானம் அருந்த வேண்டாம்

அளவுக்கு அதிகமாக மது (Alcohol) அருந்தும் நபர்கள் உடனடியாக அதை நிறுத்த வேண்டும். மதுபானம் சிறுநீரகத்தின் மீது மிகவும் மோசமான விளைவைக் கொண்டிருக்கிறது. அதிகப்படியான மது அருந்துவதால் அடிகக்டி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையில் சிறுநீரகங்கள் வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைக்கவும்

இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) மற்றும் இரத்த அழுத்த அளவு (Blood Pressure) அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக இவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டும். இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க, மருத்துவர் கொடுக்கும் மருந்தை சரியான நேரத்தில், தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. மருத்துவர் சொல்லும் பரிந்துரையை முழுமையாக பின்பற்றி அவரது ஆலோசனை படி செயல்படுவது நல்லது. 

மேலும் படிக்க | உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..

உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்

உணவில் உப்பின் அளவைக் குறைப்பது மிக அவசியமாகும். தினமும் 5 கிராம் அதாவது அரை தேக்கரண்டி உப்பு போதுமானது. உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள சோடியம் உடலில் தண்ணீரை சேமிக்கிறது. இது ஏற்கனவே சரியாக செயல்படாத சிறுநீரகங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அவை மோசமாகத் தொடங்குகின்றன.

சரியான அளவில் தண்ணீர் உட்கொள்ளவும்

பகலில் தண்ணீர் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ குடிக்காமல் சரியான அளவில் குடிக்க வேண்டும். சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க, ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படும். ஒரு நபரின் சிறுநீரகங்கள் மோசமடைந்து, கிரியேட்டினின் அளவு இயல்பை விட அதிகமாக இருந்தால், உட்கொள்ளும் நீரின் அளவைக் குறைக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: முழு பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News