அனைவருக்கும் அழகான கூந்தல் வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் பெரும்பாலானோருக்கு தலையில் முடி உதிரத் தொடங்குகிறது.
இப்போதெல்லாம், ஆண்களின் தலை முடி மிக இள வயதிலேயே உதிரத் தொடங்குகிறது. அதுமட்டுமின்றி பொடுகு பிரச்சனையும் தற்போது சர்வ சாதாரணமாகி வருகிறது.
அனைத்து விதமான வைத்தியம் செய்தும், முடி உதிர்தலுடன் பொடுகு பிரச்சனையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், மிக எளிய ஒரு இயற்கையான வழி இதற்கு உள்ளது. இதன் மூலம் நீங்கள் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கையான வழி என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த காரணங்களால் முடி உதிர்கிறது
முடி கொட்டுவதற்கு குறிப்பிட்ட ஒரே ஒரு காரணம் என எதுவும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. முடி உதிர்வு உணவு, மோசமான நீர், மன அழுத்தம் மற்றும் அதிகரிக்கும் வயது ஆகியவற்றுடன் தொடர்புடையது.
ஒருவருக்கு அதிகமாக முடி உதிரும் பிரச்சனை இருந்தால், முதலில் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.
மேலும் படிக்க | பொடுகுத்தொல்லையா? கவலை வேண்டாம், எளிதான வீட்டு வைத்தியம் இதோ
பாதாம் எண்ணெய் முடி மற்றும் வேர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஈ, புரோட்டீன் மற்றும் ஃபோலிக் அமிலம் இருப்பதால் இதன் மூலம் முடி பளபளப்பாக மாறும்.
பாதாம் எண்ணெயைக் கொண்டு கூந்தலில் மசாஜ் செய்தால், பொடுகு போன்ற முடி பிரச்சனைகள் நீங்கும்.
முட்டை + பீர்: பொடுகு பிரச்சனைக்கு தீர்வு:
- இயற்கையான முறையில் கூந்தலில் உள்ள பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
- முட்டையை பீருடன் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாக இருக்கும்.
- முட்டையால் கூந்தல் பட்டுப் போலவும் அழகாகவும் மாறும்.
- முட்டையுடன் பீர் சேர்த்து பயன்படுத்துவதால் பொடுகு பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | முடி உதிரும் பிரச்சனையா? இவை காரணமாக இருக்கலாம், இக்னோர் பண்ணாதீங்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR