இன்சுலினை இயற்கையாக சுரக்க வைத்து சர்க்கரையை கட்டுப்படுத்தும் ‘சில’ உணவுகள்!

Diabetes Diet: நாம் உண்ணும் உணவு பொருள்கள், உடலில் இருக்கும் திசுக்களுக்கு ஆற்றலைத் கொடுக்கும் வகையில் சர்க்கரையாய் மாற்றப் பட்டு இரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரையை அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் என்னும் ஹார்மோன் செய்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2023, 08:10 PM IST
  • இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் உணவுகளை எடுத்துகொண்டால் நாளடைவில் சர்க்கரை நோய் முழுமையாக கட்டுக்குள் வரும்.
  • குறிப்பிட்ட சில உணவுகள் இயற்கையான வகையில் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காயும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
 இன்சுலினை இயற்கையாக சுரக்க வைத்து சர்க்கரையை கட்டுப்படுத்தும் ‘சில’ உணவுகள்! title=

Diabetes Diet: தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், நீரிழிவை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் இயற்கையாக கட்டுப்படுத்தம் முடியும். உணவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வைத்திருந்து ஆரோக்கியமாக வாழலாம். நாம் உண்ணும் உணவு பொருள்கள், உடலில் இருக்கும் திசுக்களுக்கு ஆற்றலைத் கொடுக்கும் வகையில் சர்க்கரையாய் மாற்றப் பட்டு இரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரையை அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் என்னும் ஹார்மோன் செய்கிறது. இந்த இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவைதான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்றழைக்கப்படுகிறது.

இந்நிலையில், தொடர்ந்து இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் உணவுகளை எடுத்துகொண்டால் நாளடைவில் சர்க்கரை நோய் முழுமையாக கட்டுக்குள் வரும் என்பதில் சந்தேகம் எதுவும் வேண்டாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த உணவுகள் இயற்கையான வகையில் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள்:

மஞ்சளில் நிறைந்துள்ள வேதி பொருளான குர்குமின் நிறைந்துள்ளதால், நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது. கணையத்தில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அழற்சியை உருவாக்கும் புரதம் சுரப்பதால், இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைகின்றன. குர்குமின் இதைத் தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. 

மேலும் படிக்க | நீரிழிவுக்கு அருமருந்தாகும் ‘இன்சுலின் செடி’ இலை! பயன்படுத்துவது எப்படி!

 

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு நல்லது. இதன் சிறப்பு எண்னவென்றால், கிட்டத்தட்ட கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் போலவே செயல்படுகிறது என்பது தான். இலவங்கபட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். கூடுதலாக, இலவங்கப்பட்டை, வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. 

பாகற்காய்:

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு என்பது அனைவரும் அறிந்ததே. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கூறுகளைக் கொண்டிருப்பதால் கணையத்தைத் தூண்டி, இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரை நோய் கட்டுப்படும். கூடுதலாக, பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும், பீட்டாகரோட்டினும் உள்ளன. 

வெந்தயம்:

வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் போது இன்சுலினை சுரக்க செய்து சீர் செய்கிறது. வெந்தயத்தில் உள்ள ட்ரைகோனெல்லின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெண்டைக்காய்:

நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காயும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவை திறமையாக கட்டுபடுத்தலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சோயா பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News