உடல் எடையை மளமளவென குறைக்க வேண்டுமா? ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யுங்கள்..

Best Exercise To Rapid Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 5, 2024, 12:41 PM IST
  • உடல் எடையை வேகமாக குறைக்க..
  • சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சிகளின் லிஸ்ட்
  • இதை செய்தால் எவ்வளவு கலோரிகள் குறையும்?
உடல் எடையை மளமளவென குறைக்க வேண்டுமா? ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.. title=

Best Exercise To Rapid Weight Loss Read List Here : நவீன உலகில், பல்வேறு பழக்க வழக்க மாற்றங்களால் நம்மில் பலர்  உடல் எடை அதிகரிப்பினால் அவதிப்படுகிறாேம். எவ்வளவோ உடற்பயிற்சிகளை செய்தும், ஒரு சிலரால் உடல் எடையை குறைக்க முடியாமல் பாேகலாம். இதற்கு, அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளும் காரணமாக இருக்கலாம். ஆனால், உடற்பயிற்சி செய்தால் உடலுக்கு நன்மை என்பதும், ஒரு நாளில் இல்லையென்றால் ஒரு நாள் கண்டிப்பாக எடை குறையும் என்பதும் அனைவருக்கும் தெரியும். 

பொறுமையாக உடற்பயிற்சி செய்து, உடல் எடையை குறைப்பது, பலரது வழக்கமாக இருந்தாலும், ஒரு சிலர் ஹெவி வர்க்-அவுட் செய்து எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பர். இதற்கான பிரத்யேக உடற் பயிற்சிகளும் டயட் கட்டுப்பாடுகளும் உள்ளது. அந்த வகையில், உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில ஏரோபிக் உடற்பயிற்சிகளை இங்கு பார்ப்போம். 

Cycling

சைக்கிள் ஓட்டுவது:

சமீப காலமாக அனைவரது இல்லத்திலும் பைக்குகள், கார்கள் வாங்கிவிட்டதால் சைக்கிள் ஓட்டும் பழக்கம் பலரிடம் வெகுவாக குறைந்து விட்டது. சைக்கிள் ஓட்டுவதால் கொழுப்பு குறையும், உடலின் ஆற்றல் அதிகரிக்கும். சைக்கிளிங் சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். 30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் 295 கலோரிகளை குறைக்கலாம் என உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக உடலின் பல்வேறு இணைப்பு பகுதிகள் இணைகின்றன. 

மேலும் படிக்க | குண்டான தாய்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நீண்டகால ஆரோக்கிய பிரச்சனைகள்! பகீர் தகவல்...

Incline Walking

இன்க்லைன் வாக்கிங்:

உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி செய்வது முக்கியமானது. ஆனால், அந்த நடைப்பயிற்சியையே சில வித்தியாசமான வகைகளில் செய்தால் கண்டிப்பாக சாதாரண நடைப்பயிற்சியை விட பயனுள்ள பலன்கள் கிடைக்கும். இந்த நடைப்பயிற்சியை 60 நிமிடங்கள் வரை செய்யலாம். இது, கொழுப்பை எரிக்கும் சிறந்த நடைப்பயிற்சியாகும். இதனை த்ரெட் மில், வெளியில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி என அனைத்திலும் மேற்கொள்ளலாம். இந்த பயிற்சி வேகமாக உடல் எடையை குறைக்க உதவும். 

Boxing

குத்துச்சண்டை பயிற்சி:

சண்டை பயிற்சி செய்வதும் கொழுப்பை குறைக்கும் சிறந்த பயிற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சியால் கொழுப்பு குறைவதோடு மட்டுமன்றி, தசைகளை வலிமையாக்கவும் உதவி புரியும். உடல் எடையை வேகமாக குறைக்க விரும்புபவர்கள், கிக் பாக்சிங் அல்லது பாக்சிங் பயிற்சியில் ஈடுபடலாம். 

Running

ரன்னிங்:

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு, ஓட்டப்பயிற்சி, சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. அது மட்டுமன்றி உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் இருதய நோய்கள் வராமல் தடுக்கவும் ரன்னிங் உடற்பயிற்சி உதவுகிறது. இதில் லாங் டிஸ்டன்ஸ் ரன்னிங், ஷார்ட் டிஸ்டன்ஸ் ரன்னிங் என இருவகை ஓட்டப்பயிற்சிகள் உள்ளன. உடல் எடையை எந்த வேகத்தில் குறைக்க வேண்டும் என்று மனதில் வைத்துக்கொண்டு, எத்தனை தூரம் ஓட வேண்டும் என்று கணக்கிட்டு கொள்ளலாம். 

Dancing

நடன பயிற்சி:

நடனமும் சிறந்த உடற்பயிற்சிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. உங்களுக்கு பிடித்த இசையை அதிகமாக வைத்துக்கொண்டு ஹிப் ஹாப், ஜூம்பா போன்ற நடன பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நடன பயிற்சியும் சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இதனால் உங்கள் இதய ஆரோக்கியம் மேம்பட்டு, தசைகளின் ஆரோக்கியமும் மேம்படும். இதை செய்வதற்கு எந்த ஸ்டுடியோவிற்கும் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தவாறே இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். 

மேலும் படிக்க | ஆரோக்கியமான உடலுக்கு... வெறும் வயிற்றில் ஊற வைத்த பேரீச்சம்பழம் ஒன்றே போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News