Benefits of Ashwagandha For Liver: நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. அனைத்து உறுப்புகளும் ஒரு தனித்துவமான பணியை செய்கின்றன. உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். கல்லீரல் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் பணியை செய்கின்றது. இதன் மூலம் பல நோய்களிலிருந்து நாம் காப்பாற்றப்படுகிறோம்.
கழிவுகளை வெளியேற்றுவதுடன் இன்னும் பல நன்மைகளையும் கல்லீரல் உடலுக்கு செய்கின்றது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தி ஹார்மொன் சமநிலையின்மையை சரிசெய்கின்றது. ஆனால், கல்லீரலில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டாலும், நமது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இந்நாட்களில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை மிக வேகமாக பலரிடம் பரவி வருகின்றது. இதன் காரணமாக இந்த உறுப்பின் செயல்பாடு மோசமாக பாதிக்கப்படுகிறது,
கொழுப்பு கல்லீரல்
கொழுப்பு கல்லீரலை குணப்படுத்த மருத்துவர்கள் பல மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். எனினும், பல ஆரோக்கியமான வழிகளிலும் இந்த பிரச்சனையை சரி செய்யலாம். அதில் ஒன்று அஸ்வகந்தா. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் அஸ்வகந்தா எவ்வாறு உதவுகின்றது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அஸ்வகந்தாவால் கல்லீரலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள்
பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள அஸ்வகந்தா கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து நம்மை காப்பது மட்டுமின்றி கல்லீரல் பாதுகாப்பையும் உறுதிபடுத்துகின்றது.
அஸ்வகந்தா சாப்பிடுவதன் முக்கியத்துவம்?
1. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் நிவாரணம்
அதிகமாக மது அருந்துபவர்களின் கல்லீரல் படிப்படியாக பலவீனமடைந்து கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அஸ்வகந்தா பொடியை தவறாமல் சாப்பிடலாம். இது அதிக கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்த உதவும்.
மேலும் படிக்க | மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள உதவும் 7 பழக்கங்கள்!
2. கல்லீரல் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு
கல்லீரல் பாதிப்பு உயிருக்கே ஆபத்தாகலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் அஸ்வகந்தாவை உட்கொள்வது நல்ல பலன்களை அளிக்கும். அஸ்வகந்தாவின் பண்புகள் கல்லீரல் சேதமடைவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், கல்லீரல் செயல்பாட்டையும் சீராக வைத்திருக்கும், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
3. நச்சுப் பொருட்களிலிருந்து பாதுகாப்பு
இன்றைய துரித உணவு காலத்தில், ஆரோக்கியமற்ற மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், கல்லீரலில் அடிக்கடி நச்சுகள் சேரத் தொடங்குகின்றன, இது கல்லீரல் செயல்பாட்டை மிகவும் மோசமாக பாதிக்கிறது. ஒருவர் தொடர்ந்து அஸ்வகந்தாவை உட்கொண்டால், அது தீங்கு விளைவிக்கும் நச்சுகளின் விளைவைக் குறைக்கிறது.
அஸ்வகந்தாவின் பிற நன்மைகள்:
- அஸ்வகந்தாவில் உள்ள பல வித ஊட்டச்சத்துக்கள் உடல் பலவீனத்தை நீக்க உதவுகிறது.
- இதை உட்கொள்வதால் ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
- அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் அஸ்வகந்தாவை உணவில் சேர்த்துக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | சுகர் லெவலை சுலபமா குறைக்கும் சூப்பர் உணவுகள்: ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ