இதை சாப்பிட்டு பாருங்க : தொப்பை செம்மயா குறையும்

காலை உணவு அன்றைய முக்கிய உணவாக கருதப்படுகிறது. நீங்கள் காலையில் சத்தான காலை உணவை சாப்பிட்டால், அது எடை குறைக்க உதவுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 3, 2022, 12:27 PM IST
  • காலையில் சத்தான காலை உணவை உண்ணுங்கள்
  • உடல் பருமனை குறைப்பதில் புரதத்தின் முக்கிய பங்கு
இதை சாப்பிட்டு பாருங்க : தொப்பை செம்மயா குறையும் title=

தொப்பை கொழுப்பு: ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை தொடங்குவது, நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. காலை உணவு முக்கிய உணவாக கருதப்படுகிறது. நீங்கள் காலையில் சத்தான காலை உணவை சாப்பிட்டால், அது எடை குறைக்க உதவுகிறது. தொப்பை கொழுப்பால் நீங்கள் சிரமம் பட்டால் இந்த சில சிறப்பு விஷயங்கள் செய்யவும். 

முட்டை - முட்டையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் பசியை போக்க உதவுகிறது. காலை உணவாக முட்டை சாப்பிடலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் முட்டை தான் சிறந்த வழி.

மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!

தயிர் - உங்களுக்கு பால் பிடிக்கவில்லை என்றால், பாலில் இருந்து கிடைக்கும் கால்சியத்தை தயிருடன் ஈடுகட்டலாம். இதில் போதுமான அளவு கால்சியம் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் உள்ள புரோபயாடிக்குகள் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது.

உப்மா - உப்மாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆரோக்கியமான எடையை பராமரிக்க உப்மா சிறந்த உணவாகும். இதில் ரவை உள்ளது. இதில் இயற்கையாகவே கொழுப்பை குறைக்கும் ஆற்றல் உள்ளது மற்றும் நல்ல கொழுப்பு உள்ளதால், உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கிறது. 

பருப்பு - பருப்பு உடல் எடையை குறைக்க உதவும். பருப்பு புரதத்தின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. உடல் எடையை குறைப்பதிலும், உடல் பருமனை குறைப்பதிலும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News