கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!

உடல் பருமனை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து உடற்பயிற்சிகளும், டயட்டுகளும் பலனளிக்கவில்லை என்றால்,  இந்த ஆயுர்வேத பொடியை நீங்கள் முயற்சி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதை உங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 2, 2023, 11:12 PM IST
  • ஆயுர்வேத பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்.
  • எடை இழப்பு பொடியை தயாரிக்கும் முறை.
  • உடல் எடையை குறைக்க பொடியை சாப்பிடும் முறை.
கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை! title=

உடல் பருமன் இன்று மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்குப் பெரிய காரணம் தவறான உணவுப் பழக்கம் மற்றும் உட்கார்ந்தே வேலை செய்யும் வாழ்க்கை முறை. அதிகரித்த உடல் பருமன் உங்கள் அழகைக் கெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, உடல் பருமன் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை பயன்படுத்துகின்றனர். உடல் எடையை குறைக்க எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழி ஆரோக்கியமான உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகும். அதே நேரத்தில், எடையைக் குறைக்க ஆயுர்வேத வைத்தியங்களும் உள்ளன. அவை மிகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகின்றன.

உடல் பருமனை குறைக்கும் ஆயுர்வேத பொடி

ஆயுர்வேதத்தில் உடல் எடைய குறைக்க பல மூலிகைகள் உள்ளன. பெருஞ்சீரகம், தனியா மற்றும் சோம்பு போன்ற மசாலா மற்றும் மூலிகைகள் தொப்பையை கரைக்கும். இவற்றின் கலவையில் இருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத தூள் குடல்களின் செயல்பாட்டை மேம்படுத்தி எடையை குறைக்கிறது. கலோரிகளையும் எரிக்கிறது உடல் எடையை குறைக்க ஆயுர்வேத பொடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

ஆயுர்வேத பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்

1. சீரகம்
2. ஓமம்
3. சோம்பு
4. பெருங்காயம்

எடை இழப்பு பொடியை தயாரிக்கும் முறை

முதலில் சீரகம், ஓமம், சோம்பு மற்றும் பெருங்காயத்தை சம பாகமாக கலக்கவும். இப்போது அவற்றை அரைத்து பொடி செய்வதற்கு முன் லேசாக வறுக்கவும். இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

உடல் எடையை குறைக்க பொடியை சாப்பிடும் முறை

காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தண்ணீரில் சேர்த்துக் குடிப்பதைத் தவிர, சாலட்களில் மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதத்தில் சீரகம், ஓமம், சோம்பு மற்றும் பெருங்காயம் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விஷயங்களின் கலவையானது கூடுதல் எடையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும், இரைப்பை பிரச்சனைகளை நீக்கவும் உதவியாக இருக்கும். இந்த மசாலாக்கள் உடலின் மெட்டபாலிசத்தை சரியாக வைத்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீரகம், ஓமம், சோம்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் அதிக கலோரிகளை உட்கொள்வதைத் தவிர்க்கிறது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News