உங்களுக்கு 'உயர் இரத்த அழுத்தம்' என்றால் இந்த உணவுகளை தவிர்க்கவும்

High Blood Pressure Avoid Foods: இரத்த நாளங்களில் இரத்தத்தின் வேகம் அதிகரிக்கும் போது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 19, 2022, 10:04 PM IST
உங்களுக்கு 'உயர் இரத்த அழுத்தம்' என்றால் இந்த உணவுகளை தவிர்க்கவும் title=

உயர் இரத்த அழுத்தம் (Hypertension) என்பது இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பலரிடம் காணப்படுகிறது. சில குறிப்பிட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம் மற்றும் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த முடியும். பக்கோடா, பஜ்ஜி, வடை போன்ற சிற்றுண்டிகள் வாய்க்கு சுவையானதாக இருந்தாலும் ஆரோக்கியமானவை அல்ல. தினசரி உட்கொண்டால், அது ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.  இருதய நோய் மற்றும் இறப்பைக் குறைக்க, உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பது அவசியம்  என பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் (British Journal of Nutrition) கூறுகிறது. எடை இழப்புக்கு உதவு உணவு அல்லது குறைந்த அளவு சோடியம் உணவு இரத்த அழுத்தத்தின் உயர்வைக் கட்டுப்படுத்தலாம். பொட்டாசியம் அல்லது கால்சியம் உள்ள உணவு பொருட்களையும் சேர்க்கலாம். 

உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட இறைச்சி: பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். இறைச்சிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு  உப்பு சேர்க்கப்பட்டுள்ளன. இதனுடன் சேர்ந்து வரும் சாஸ்கள், ஊறுகாய், சீஸ் அல்லது ரொட்டியில் உள்ள அதிக சோடியம்  நிறைந்த உணவும்  உடலுக்கு நல்லதல்ல

பேக் செய்யப்பட்ட உணவு: பேக் செய்யப்பட்ட உணவுகள் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும். பேக் செய்யப்பட்ட உணவில், ஊட்டசத்தும் அதிகம் இருப்பதில்லை. எனவே புதிதாக சமைக்கபட்ட உணவை சாப்பிடுவது சுவையானது என்பதோடு ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

காபி: காபியில் உள்ள காஃபின் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கிறது. அதனால்தான் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை மிகவும் குறைக்க வேண்டும். 

சர்க்கரை: சர்க்கரை அதிகம் எடுத்துக் கொண்டால், அது உயர் ரத்த அழுத்தம் மட்டுமல்ல. பல நோய்களுக்கு வழிவகுக்கும். உடல் பருமன், பல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம். சர்க்கரை உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

உப்பு: அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்திற்கு நல்லதல்ல. ஊறுகாய் வத்தல் போன்றவற்றில் அதிக உப்பு இருக்கும். உணவு நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்க உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே இதனை தவிர்க்கவும்.

பிரெட்: பிரெட் மைதாவால் ஆனது என்பதால் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மைதா உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

பீனட் பட்டர்: Peanut Butter எனப்படும் வேர்க்கடலை வெண்ணெய் ஆரோக்கியமானதல்ல. இது கொழுப்பின் அளவு அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் அதிக சோடியம்  உள்ளதன் காரணமாகவும், இது மிகவும் தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும், அதற்குப் பதிலாக உப்பு சேர்க்காத வேர்க்கடலை வெண்ணெய் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: காலை உணவை இப்படி சாப்பிட்டால் நீரிழிவு கட்டுக்குள் வரும்

மேலும் படிக்க: நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இவை அவசியம்: இன்றே உணவில் சேருங்கள்

மேலும் படிக்க: நீரிழிவு நோயை ஓட விரட்டும் பிரியாணி இலை; பயன்படுத்தும் முறை!

மேலும் படிக்க: இந்த நபர்கள் பால் அருந்தக்கூடாது: உடலுக்கு ஆபத்து ஏற்படலாம்

மேலும் படிக்க: நீரிழிவா? பித்தமா? கட்டியா? தூதுவாளை இருந்தால் வேறென்ன தேவை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News